Connect with us

#24 Exclusive

தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ! பட்டியலில் தோனி !!!? வந்துட்டேன்னு சொல்லு !!!?

கடந்த உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்திற்கு பிறகு தோனி எந்த தொடரிலும் இடம்பெறவில்லை சிறிது நாட்கள் இராணுவத்தில் பணியாற்றினார் அதன்பிறகு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்கவில்லை. இதனால் தோனி மீண்டும் எப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு வந்தது.

அதன்பிறகு சமீபத்தில் BCCI இந்திய அணியினரின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது, அதில் தோனி பெயர் இல்லாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது, அத்துடன் தோனி இடம்பெறாததற்கு காரணம் என்னவென்றும் தற்போதுவரை அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்,

இந்நிலையில் தான் தோனி BCCI பட்டியலிலும் இந்திய அணியில் மீண்டும் வருவதற்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன, வருகிற மார்ச் மாதம் பங்களாதேஷில் ஆசியா லெவன் அணிக்கும், ரெஸ்ட் ஆஃப் தி வேர்ல்டு லெவன் அணிக்கும் இடையே இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் ஆசிய கிரிக்கெட் அணிகளை சேர்ந்த வீரர்கள் ஆசிய அணியில் இடம்பெற உள்ளனர்.

Loading...

இதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் சார்பாக சில இந்திய வீரர்கள் விளையாட BCCI யிடம் அனுமதி கோரப்பட்டது . அதில் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆசிய லெவன் அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்கள்.

Loading...

இதற்கு தற்போது தோனி பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தோனி ஏசியன் T20 தொடர்களில் விளையாடியதும் அவரது பெயர் BCCI ஒப்பந்த பட்டியலில் இடம்பெறும் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன, தோனியின் ஆட்டத்தை காண காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு ஏசியன் t20 போட்டி விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending