தினமும் அதை நினைத்து தூங்காமல் அழுகிறேன் ! பரபரப்பு பேட்டியளித்த தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் முக்கியமானவர் தோனி , இவரை உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று சொன்னாலும் மிகையாகாது இவருடன் ஒரு விக்கெட் கீப்பரை ஒப்பிட வேண்டுமென்றால் ஆடம் கில்கிரிஸ்ட்டை மட்டுமே ஒப்பிட முடியும் .

Loading...

தொடர்ந்து பல ஆண்டுகள் இந்திய அணிக்கு 3 வகை போட்டிகளிலும் கேப்டனாக திகழ்ந்த தோனி 2017 ஆம் ஆண்டு கேப்டன் பதவியை துறந்து ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ஆடிவந்தார் . ஆனால் 2019 உலககோப்பைக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை .

இன்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தோனி உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் முக்கிய கட்டத்தில் தான் ரன் அவுட் ஆனேன் . இரவு தூங்கும்போது இன்றுவரை அதுபற்றி நினைக்கிறேன் , ஏன் அப்போது நான் டைவ் அடிக்கவில்லை என்று தினமும் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன் அது எனக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்று உருக்கமாக பேசினார் .

Loading...

இந்தியா நியூசிலாந்து இடையே நடந்த உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு வெறும் 240 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்க பட்டது ஆனாலும் இந்திய அணியின் துவக்கவீரர்கள் ராகுல் , ரோஹித் , கோலி ஆகியோர் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர் தினேஷ் கார்த்திக் 6 ரன்னில் ஆட்டமிழந்தார் ,

பாண்டியா , பண்ட ஆகியோர் தலா 32 ரன்னில் வெளியேறினார் . தோனி மற்றும் ஜடேஜா மட்டுமே அணிக்கு நம்பிக்கை அளித்த நிலையில் ஜெட்டு 77 ரன்னில் வெளியேற 10 பந்துகளில் 25 ரன்கள் தேவைப்பட்டபோது 49 ரன்கள் அடித்திருந்த தோனி முதல் ரன்னை முடித்து இரண்டாவது ரன்னுக்கு வரும்போது நூல் இலையில் ரன் அவுட் ஆனார் .

இறுதியில் 9 பந்துகளில் 24 ரன்கள் அடிக்கவேண்டி இருந்ததால் அதை அடிக்க முடியாமல் இந்திய அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது இப்போது தோனி இதுபற்றி பேசியிருப்பது தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*