Connect with us

அரசியல்

ட்விட்டரில் தருமபுரி எம் பி முதலிடம் பிடித்தார் ! இதுக்கு சந்தோசப்படக்கூடாது சென்ட்ராயன் வெட்கப்படணும்.

Published

on

சமூகவலைத்தளம்.,

திமுக தருமபுரி எம் பி மருத்துவர் செந்தில் குமார் தமிழக எம் பி கள் செய்யாத புதிய சாதனையை படைத்து முதலிடம் பிடித்துள்ளார். தருமபுரி எம் பி செந்தில்குமார் சமூகவலைத்தளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், பல நேரங்களில் எழுத்து பிழைகளுடன் அவர் வெளியிட்ட ட்விட்கள் படு கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது.

அதனை முன்வைத்து அவரை பலர் விமர்சனம் செய்து வந்தனர் சமீபத்தில் தருமபுரி எம் பி செந்தில்குமாரின் ட்விட்டர் பக்கத்தில் மக்களின் கோரிக்கையை ஏற்று எரியாமல் இருந்த தெரு விளக்கை சரி செய்து விட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் செந்தில் அதனை தொடர்ந்து வார்டு கவுன்சிலர் செய்யவேண்டிய வேலையை செய்துவிட்டு பெரிய சாதனையாக அதனை படம் எடுத்து போடுகிறீர்கள், எங்கள் ஊரில் சாலை சேதமடைந்துவிட்டது அதனை எம் பி சிறப்பு நிதியில் இருந்து சரிசெய்து கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தோம் ஆனால் அதனை கண்டுகொள்ளவில்லை என்று மதன் என்பவர் கமெண்ட் செய்திருந்தார்.

Loading...

ஆனால் அவரது கேள்விக்கு பதில் சொல்லாத செந்தில் அவரது ட்விட்டர் கணக்கை பிளாக் செய்துவிட்டார், மறுபுறம் தொடர்ந்து விவேக், வன்னியரசு, சிவகுமார் உள்ளிட்ட தருமபுரி பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் குமாரை ட்விட்டரில் தொடர்புகொண்டு நாங்கள் எங்கள் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான குடிநீரை பெற அவதிப்படுகிறேன் நீங்கள் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி என்ன வென்று கேளுங்கள் என்று நாடாளுமன்ற தேர்தலின் போது தற்போதைய எம் பி செந்தில்குமார் பேசிய வீடீயோவை வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளனர். அதில் குடிநீர் பிரச்னையை 100 நாட்களில் முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

Loading...

இந்நிலையில் அந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் பிளாக் செய்துவிட்டார் செந்தில் இதனால் தமிழக எம் பி களில் அதிக நபர்களை ட்விட்டரில் பிளாக் செய்த நபர் என்ற பெருமையை தருமபுரி எம் பி பெற்றிருப்பதாகவும், இதுவரை கேள்வி எழுப்பிய ஆயிரத்திற்கு மேற்பட்ட நபர்களை பிளாக் செய்து முதலிடம் பிடித்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர், மேலும் பிரபலமான மூடர்கூட டைலாக்கை பகிர்ந்து இதற்கு சிரிக்க கூடாது சென்ட்ராயன் வெட்கப்படணும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் எட்டுவழி சாலை வேண்டும் என்று தருமபுரி எம் பி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending