Connect with us

#24 Exclusive

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனான பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை !

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தர்பார் இந்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார் அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார் .

படம் வெளியாகி 3 நாட்கள் முடிந்த நிலையில் இதுவரை படம் பார்த்த பலருக்கும் தெரியாத ஒரு தகவல் இப்போது வெளியாகியுள்ளது . தர்பார் படத்தில் முதல் பாதியில் வில்லனாக வருபவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் .

இந்த தகவலை யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில் யோக்ராஜ் சிங்கின் படத்தை பதிவிட்டு இவர் யுவராஜ் சிங்கின் தந்தை என்பதை எத்தனை பேர் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டுள்ளார் . மேலும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளராக சில போட்டிகளில் ஆடிய யோக்ராஜ் சிங் பின்னர் ஏற்பட்ட விபத்து காரணமாக கிரிக்கெட் விளையாட முடியாமல் போனது .

Loading...

அதனால் பஞ்சாபி திரையுலகில் இணைந்து இதுவரை 66 படங்களில் நடித்துள்ள இவருக்கு தர்பார் 67 ஆவது படம் . ஆனால் இவருக்கு இதுதான் முதல் தமிழ் படம் . பஞ்சாபை சேர்ந்த ஹர்பஜன் சிங் , மற்றும் ஜாஹிர் கான் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்

Loading...
Loading...

Trending