ரஜினியின் தர்பார் படக்காட்சிகள் சமூகவலைதளத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி

ரஜினியின் ” தர்பார் ” படம் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸால் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் வட இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயந்தாரா நடிக்கிறார். இந்தப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தற்போது தர்பார் படக்காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகி படக்குழுவினர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் போலீஸ் உடையில் நின்று போட்டோ ஷூட் எடுப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

மேலும் ரஜினிகாந்த மற்றும் யோகிபாபு இருவரும் கிரிக்கெட் விளையாடும் போது, நயன்தாரா நடந்து வருவது பொன்ற காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த சிலர், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடியும் போதும் இது போன்ற சில காட்சிகள் சமூக வலைதளத்தில் வந்துவிடும் என்று மீம்ஸ் போட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, படப்பிடிப்பு நடக்கும் இடத்தை சுற்றிலும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர் படக்குழுவினர். உள்ளே செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, மற்றும் பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு கடும் பாதுகாப்பையும் மீறி திருட்டுத்தனமாக படக்காட்சிகளை திருடி வெளியிட்டு வருகிறார்கள். இதில் போலீஸ் உடை அனிந்து ரஜினி காருடன் நிற்கிறார், அருகில் நயன்தாரா நிற்கிறார். அதனால் இன்னும் 2 வாரம் இந்த ஊரில் படப்பிடிப்பு நடக்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3888 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*