Connect with us

#24 Exclusive

தர்பார் படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு தெரியுமா ? தர்பார் Vs பிகில் வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தர்பார் இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார் தர்பார் என்ற பெயரை கேட்டதும் இது நிச்சயம் அரசியல் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நினைத்தனர் ,

அதுமட்டுமல்லாமல் ஏஆர் முருகதாஸ் தனது முந்தைய படமான சர்க்கார் படத்தில் விஜயை வைத்து தீவிர அரசியலை பேசியிருந்தார் . ஆனால் தர்பார் படம் அரசியல் சாயம் இல்லாமல் முழு கமர்சியல் படமாக வந்துள்ளது , இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் படமாக உள்ளது .

சுமார் 185 கோடி செலவில் உருவான இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை மட்டும் 60 கோடி ரூபாய்க்கு வாங்கியது சன் டிவி மற்றும் அமேசான் . கடந்த 9 ஆம் தேதி படம் வெளியான நிலையில் நேற்றுடன் 9 நாட்களை கடந்துள்ளது தர்பார் இந்நிலையில் தர்பார் சென்னையில் மட்டும் 11.3 கோடிரூபாய் வசூல் செய்துள்ளது .

Loading...

தமிழகம் முழுவதும் 115 கோடி ரூபாயை இதுவரை வசூல் செய்துள்ளது தர்பார் போட்டிக்கு எந்த படமும் இல்லாததால் வசூலை வாரி குவித்துள்ளது தர்பார் திரைப்படம் . கடந்த தீபாவளிக்கு வெளியான விஜயின் பிகில் திரைப்படம் தமிழகம் முக்குவதும் 143 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தர்பார் இதுவரை 115 கோடி வசூல் செய்துள்ளது இன்னும் 2 நாட்கள் விடுமுறை உள்ளதாலும் விடுமுறை முடிந்தும் சில நாட்கள் இந்த படம் ஓடும் என்பதாலும் பிகில் வசூலை தர்பார் முறியடிக்க வாய்ப்புள்ளது

Loading...

ஆனாலும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் மறுமுனையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் சென்னையில் மட்டும் 1.1 கோடியும் தமிழகம் முழுவதும் 11 கோடியும் வசூல் செய்துள்ளது இந்த படம் 3 நாட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது .

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending