Connect with us

#24 Exclusive

64 நாட்களில் படப்பிடிப்பு முடிந்த தனுஷின் அடுத்த படம்!

Published

on

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய குறைந்தது 3 மாத காலம் ஆகும் என்ற நிலையில் தனுஷ் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு வெறும் 64 நாட்களில் முடிவடைந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் லண்டனில் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை விடாமல் தொடர்ச்சியாக நடந்த இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் 64 நாட்களில் முடிவடைந்துள்ளது

முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்ட இந்த படம் ஒரு த்ரில் கதையம்சம் கொண்ட திரைப்படம் என்றும் இந்த படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் ’சுருளி’ என்று வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒய்நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இன்னும் ஓரிரு நாளில் படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர். ஏற்கனவே தனுஷ் நடித்த ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் பட்டாஸ் ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தனுஷின் இந்த படமும் இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீசுக்கு தயாராகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share