Connect with us

சினிமா

தனுஷ் படத்தை தடை செய்து இயக்குனரை கைது செய்ய வேண்டும் – கருணாஸ் கட்சியினர் புகார் !

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிவரும் கர்ணன் படத்திற்கு தடை விதித்து அவரை கைது செய்ய வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும்பெருமாள் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் திரைப்படத்தின் மையக் கதை தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி கலவரத்தை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை சேர்ந்தவர்கள் இந்த திரைப்படத்தை தடை செய்து அதன் இயக்குனர் கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

Loading...

தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளர் பவானி வேல்முருகன், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் “1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது.

Loading...

குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending