ஒரே டைட்டிலில் சிவகார்த்திகேயன்-தனுஷ் படங்கள்: பெரும் பரபரப்பு

Loading...

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் திரைப்படத்திற்கு ’டாக்டர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்று முன் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே ’டாக்டர்ஸ்’ என்ற டைட்டிலில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க இருந்ததாகவும் இந்த படத்தை செல்வராகவன் இயக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘டாக்டர்ஸ்’ என்ற டைட்டிலை ஏற்கனவே செல்வராகவன் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Loading...

இந்த படம் தயாரிக்க திட்டமிட்டு பல வருடங்களா ஆனபோதிலும் தற்போது இந்த படத்தை உருவாக்க தனுஷ் மற்றும் செல்வராகவன் திட்டமிட்டுள்ளனர் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்க இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் அந்த டைட்டிலில் ஒரே ஒரு எழுத்தை மட்டும் குறைத்து சிவகார்த்திகேயன் தனது தனது படத்தின் டைட்டிலாக வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ‘ஹீரோ’ படத்தி டைட்டிலில் விஜய் தேவர்கொண்டா ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த பஞ்சாயத்து இன்னும் ஓயாத நிலையில் தற்போது டாக்டர் டைட்டிலும் சிக்கலில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*