துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

Loading...

தமிழகத்தின் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராகவும் பல முறை அமைச்சராகவும் இருந்தவர் ஓ பன்னீர்செல்வம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதல்வர் பதவியில் இறக்கப்பட்ட அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதன் பின் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்து துணை முதல்வர் பொறுப்பை பெற்றார். இப்போது இரு ஆண்டுகளுக்கும் மேலாக எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தி வருகிறார்.

Loading...

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை அதிமுக நிர்வாகிகளோடு சேர்ந்து வழங்கி வந்தார் ஒ பன்னீர் செல்வம். இந்நிலையில் இன்று காலை அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் வழக்கமான அவர் செல்லும் மருத்துவ பரிசோதனை இது என்றும் அச்சப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*