மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், சென்னை திருவொற்றியூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்‍கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Loading...

திருவொற்றியூர் ஜீவன்லால் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பவானி என்பவருக்‍கு, கடந்த 2 நாட்களுக்‍கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்‍கப்பட்டு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவானி உயிரிழந்தார். பவானியின் கணவர் காவலராக பணிபுரிந்து வரும் நிலையில், 2 வயதான சமீரா என்ற பெண் குழந்தை உள்ளது. உயிரிழந்த பவானியின் தாயார் ராமலட்சுமி காய்ச்சல் ஏற்பட்டு திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜீவன்லால் நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் கழிவு நீர் தொட்டிகளில் தேங்கும் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை சாரா, 62 வயது மூதாட்டி மேரி ஆகியயோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்‍காக சேர்க்‍கப்பட்டனர். இதையடுத்து மேலும் 6 பேருக்‍கு டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அரசு மருத்துவ கல்லூரியில் சிகிசைக்காக அனுமதிக்கபடவர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 8-ஆக உயர்ந்துள்ளது.

Loading...
Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*