Connect with us

அரசியல்

டெல்லியில் இருந்து திரும்பும் H ராஜாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் தீவிரம், கதற போகும் பெரியாரிஸ்ட்கள்.

தமிழக பாஜக தலைவராக H ராஜா தேர்வாகியிருப்பதாகவும், அதனையடுத்து அவர் டெல்லி செல்லவிருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் இப்போதே காரைக்குடி உட்பட தமிழகம் முழுவதும் போஸ்டர் மற்றும் பேனர் அடித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும் டெல்லியில் இருந்து திரும்பும் அவரை வரவேற்க மிக பெரிய அளவில் ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கடந்த 2014-ஆம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரானதால், அவர் வகித்து வந்த பாஜக தமிழக தலைவர் பொறுப்பு தமிழிசையிடம் வழங்கப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதவியேற்ற அவரது பதவிக் காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.எனினும், கடந்த மக்களவை தேர்தல் முடிவில் நாடு முழுவதும் ஒரு முடிவெடுக்க, தமிழகம் மட்டும் அதற்கு நேர் எதிரான முடிவை எடுத்தது. தேர்தல் முடிவுகளில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்த பாஜக படு தோல்வி அடைந்தது.

இதையடுத்து, தமிழிசையால் எந்த வெற்றியையும் பாஜக-வால் தமிழகத்தில் பெரிதாக ஈட்ட முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அக்கட்சியினராலேயே வெளிப்படையாக முன் வைக்கப்பட்டன. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை மாற்றப்படுவார் என உறுதியாக தெரிவித்தார்.அதனைத்தொடர்ந்து, மத்திய அரசு உத்தரவின் பேரில், கடந்த 8-ம் தேதி தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர், தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவர் யார்?
என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது.

Loading...

வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன்,ஸ்ரீனிவாசன் நயினார் நாகேந்திரன் என பல்வேறு பெயர்கள் ரேஸில் இருந்து வந்தாலும், தலைவர் பதவியை பிடிக்க பொன்னார் மற்றும் எச்.ராஜா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வந்ததாக கூறப்பட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவியதால் மாநில தலைவர் பொறுப்பை கண்டிப்பாக பிடித்து விட வேண்டும் என பொன்னார் முனைப்பு காட்டி வந்ததாக தகவல்கள் வெளியாகின.

Loading...

கடந்த முறை தலைவராக தமிழிசை அறிவிக்கப்பட்ட போதும், எச்.ராஜா போட்டியில் இருந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த வாய்ப்பு அவர் கையை விட்டு நழுவி சென்று விட்டது. எனவே, இந்த முறை எப்படியேனும் தலைவர் பதவியை கைபற்றி விட வேண்டும் என தீவிரம் காட்டி வந்ததாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சீனியர் என்ற முறையில் எச்.ராஜாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பினும், எதிர்க்கட்சிகளை கையாள்வது, பாஜக-வுக்கு எதிரான விமர்சனங்களை சமாளிப்பதில் எச்.ராஜா திறமையாக செயல்படுவார் என கட்சி மேலிடம் நம்புவதாகவும், இனி தமிழகத்தில் அதிரடி அரசியலை கையில் எடுக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாலும் பாஜக தமிழக தலைவராக H RAJA தேர்வாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் சுப வீரபாண்டியன் இது பெரியார் மண் இங்கு பாஜக தலைவராக யாரை தேர்வு செய்ய முடியாது என்பதை தீர்மானிப்பது நாங்கள்தான், இங்கு H ராஜா போன்றோர் நிச்சயம் தமிழக தலைவராக வரமுடியாது என அடித்து கூறினார் இந்நிலையில் நாளை H ராஜா தமிழக தலைவராக பொறுப்பேற்றால் இவரை போன்ற பெரியாரிஸ்ட்கள் நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள் என்பது உண்மையே !

அதே நேரம் இதுவரை தமிழக பாஜக தலைவராக பலரும் தேர்வாகியிருப்பதாக செய்திகள் வெளியாகின மேலும் இதற்கு முன்னர் நயினார் நாகேந்திரன் தேர்வானதாகவும் செய்திகள் வெளியான சூழலில் தற்போது H ராஜா டெல்லி சென்று மாநில தலைவராக பொறுப்பேற்றால் மட்டுமே நிச்சயம்.

©TNNEWS24

Loading...

Trending