டில்லியில் யாருக்கு எத்தனை தொகுதி தலைநகரை கைப்பற்றப்போவது யார் சர்வே முடிவுகள்?

இந்தியாவின் தலைநகரான டில்லியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது, அதற்கு காரணம் இந்த முறை ஆட்சியை பாஜக கைப்பற்றுமா அல்லது ஆம் ஆத்மீ மீண்டும் வருமா என்ற மிக பெரிய தேடல்தான் காரணம் !

Loading...

2015 டெல்லி சட்டமன்ற தேர்தலின் பொழுது
இதே ஜனவரி மாத காலத்தில் தேர்தல் களத்தில் பிஜேபி தான் முன்னிலையில் இருந்தது. ஆனால் குடியரசு தின விழாவின் பொருட்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் விசிட்டினால் உண்டான பாதுகாப்பு கெடுபிடிகளாலும் அப்பொழுது மோடி அணிந்து இருந்த கோட்டினை வைத்தும் கெஜ்ரிவால் டீம் உருவாக்கிய பிஜேபி எதிர்ப்பு பிரச்சாரம் அந்த தேர்தலில் பிஜேபிக்கு படுதோல்வியை அளித்தது.

ஆனால் இப்பொழுது 2015 தேர்தல் மாதிரி
முடிவுகள் அமையாது என்று உறுதியாக கூறலாம். ஏனென்றால் குடியுரிமை திருத்த சட்டஎதிர்ப்பு மூலமாக காங்கிரஸ் முஸ்லிம் ஓட்டுக்களை மீண்டும் நிச்சயமாக பெற்று விடும். அதோடு பிஜேபி எதிர்ப்பு வாக்குகளை முழுமையாக இம்முறை ஆம்ஆத்மியால் பெற
முடியாது என்பதால் கெஜ்ரிவால் மீண்டும்
முதல்வராக வருவது கஷ்டம் தான்.

Loading...

கெஜ்ரிவால் அரசியலுக்கு வருவதற்கு முன்
டெல்லியில் காங்கிரஸ் தான் பிஜேபியை விட
அதிக ஓட்டு சதவீதத்தை வைத்து இருந்தது.
ஆனால் கெஜ்ரிவால் வந்த பிறகு காங்கிரஸ்
ஓட்டுக்கள் தான் குறைந்த்தே தவிர பிஜேபி
ஓட்டுக்கள் குறையவில்லை.இதனால் இம்முறை காங்கிரஸ் கடந்த 2015
தேர்தலில் பெற்ற 10 சதவீத வாக்குகளைவிட அதிகமாக 20-25 சதவீத வாக்குகளை
நிச்சயமாக பெற முடியும் என்பதால் இம்முறை நிச்சயமாக காங்கிரஸ் 5-10 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்.

கடந்த 2019 லோக்சபாதேர்தலில் காங்கிரஸ் ஆம் ஆத்மியை விட 5 சதவீத வாக்குகளை அதிகமாக பெற்றது அதாவது 23 சதவீத வாக்குகளை பெற்றது சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் 20+ சதவீத வாக்குகளை நிச்சயமாக பெற முடியும்.என எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் 33 சதவீத வாக்குகளை பெற்ற பிஜேபி இப்பொழுது குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மோடி மூலமாக நிச்சயமாக 40 சதவீத ஓட்டுக்களு
க்கு அதிகமாகவே இந்த முறை பெற்று விடும் என்பதால் பிஜேபிக்கு 35-40 தொகுதிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.

2019 லோக்சபாதேர்தலில் டெல்லியில் பிஜேபி 58 சதவீதவாக்குகளை பெற்று 7 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது. லோக்சபா தேர்தலில் பெற்ற 15 சதவீத ஓட்டுக்களை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆ த்மியிடம் பிஜேபி இழந்தாலும் பிஜேபி தான் முன்னிலை பெரும்.

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 54 சதவீத ஓட்டுக்களை பெற்று 67 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி டெல்லி சட்டமன்ற வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஆம் ஆத்மி தற்போது
2019 லோக்சபா தேர்தலில் 18 சதவீத வாக்கு
களை மட்டுமே பெற்று ஒரு தொகுதியில் கூட
வெற்றி பெற முடியாமல் மண்ணை கவ்வியது.

லோக்சபா தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் கெஜ்ரிவால் பேக்ட் ஒர்க் அவுட் ஆகும் என்றாலும் ஆம்ஆத்மி இந்த சட்டமன்ற தேர்தலில் அதிகப்பட்சமாக 35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடியும். இதனால் ஆம் ஆத்மி 25-30 தொகுதிகளுக்கு மேல் நிச்சயமாக பெற முடியாது.

பிஜேபிக்கு டெல்லி அரசியலில் கெஜ்ரிவால்
பாப்புலாரிட்டிக்கு சமமான தலைவர் இல்லை
என்கிற ஒரே காரணத்தினால் தான் கெஜ்ரிவால் பிஜேபிக்கு கடுமையான போட்டியாக இருக்கிறார். இருந்தாலும் காங்கிரஸ் பிரிக்கும் வாக்குகளினால் பிஜேபிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றும் சர்வே முடிவுகள் கூறுகின்றன.
(திரு. விஜயகுமார் )

சுருக்கமாக சொல்ல போனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாங்கிய வாக்கு 58% ஆம் ஆத்மீ வாங்கிய வாக்கு 18% எனவே பாஜகவிடம் இருந்து ஆம் ஆத்மீ கூடுதலாக 20% வாக்குகளை பெற்றாலும் காங்கிரஸ் பிரிக்கும் வாக்குகளால் நிச்சயம் பாஜக முன்னிலை பெரும் என்றே தெரியவந்துள்ளது, சென்ற முறை போல் கெஜ்ரிவாலை யாராவது அடித்தால் கூட 1 % வாக்குகள் குறையுமே தவிர கூடாதாம் இதுதான் டெல்லி நிலைமை?

Loading...
About Tnnews24 2663 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*