டெல்லி அரியணை யாருக்கு வெளியானது இருவேறு தேர்தலுக்கு முந்தைய பிரமாண்ட கருத்து கணிப்பு ! கடும் போட்டி !!

டெல்லி :- இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வருகிற 8 – ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, அதன் பிறகு முடிவுகள் 11- ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன, டெல்லி அனைத்து மாநிலங்களை விட சற்று வித்தியாசமான மாநிலம் என்றே கூறலாம்.

Loading...

மக்களவை தொகுதியில் ஒரு மாதிரியும் சட்டமன்ற தேர்தலில் வேறொரு பாணியும் அங்குள்ள வாக்காளர்கள் எடுப்பது தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் மூலம் தெளிவாகிறது, பிரபல ஆங்கில தொலைக்காட்சி TIMESNOW வெளியிட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மீ அபார வெற்றி பெரும் என கூறியுள்ளது கிட்டத்தட்ட கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆம் ஆத்மீ கட்சி 54 முதல் 60 இடங்களையும் கைப்பற்றும் என்று குறிப்பிட்டுள்ளது.

பாஜக 10 முதல் 14 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாகவும், காங்கிரஸ் 0 முதல் 2 இடங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆம் ஆத்மீ கட்சிக்கு 52% வாக்குகளும், பாஜகவிற்கு 34% வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 4% வாக்குகள் கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் வெளியாகியுள்ளது.

Loading...

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக டெல்லியின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது மேலும் 52% வாக்குகளை பெற்றது ஆனால் தற்போது அதே நிலை சட்டமன்ற தேர்தலில் மாறியிருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

அதே நேரத்தில் சிந்தாமணி நிறுவனம் கடந்த காலங்களில் கருத்து கணிப்புகளை திறம்பட நடத்தி இருக்கிறது, பெரும்பாலும் அதன் கருத்துக்கணிப்பு முடிவுகள் 90% இதுவரை சரியாக இருந்துள்ளன, chinthamani5dots நிறுவனம் டெல்லி சட்டமன்ற தேர்தலை அடுத்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் அடிப்படையில் பாஜக 33 முதல் 37 இடங்களில் வெல்லும் எனவும், ஆம் ஆத்மீ 33 முதல் 37 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 0-3 இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது, வாக்குகள் அடிப்படையில் பாஜக 41-43 % எனவும், ஆம் ஆத்மீ 40-42%, காங்கிரஸ் 7முதல் 9% வாக்குகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

டெல்லியை பொறுத்தவரையில் தற்போது பல அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன, பிரதமர் மோடியின் பரப்புரைக்கு பின்னர் பாஜக டெல்லியில் வெல்லும் என அவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், அதேநேரம் ஆம் ஆத்மீ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர், இவ்விரண்டு கட்சிகளை காட்டிலும் காங்கிரஸ் கட்சியின் நிலைமை படு மோசமாக உள்ளது தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த கட்சி காணாமல் போய்விட்டதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் இருந்து தெரியவருகிறது.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3888 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*