Connect with us

#24 Exclusive

டெல்லியில் வீடுகளுக்கு தீ வைப்பு போலீசார் பலி இனி குஜராத் மோடியை பார்ப்பீர்கள் கடும் ஆவேசம் !! மோடி டெல்லி விரைவு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்க இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் இந்தியா வரும் நேரத்தில் கலவரம் வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய உளவுத்துறை டெல்லி காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தது, இந்நிலையில் காவல்துறை எச்சரிக்கை விடுத்ததை போன்றே மிக பெரிய அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளன.

மாஜ்பூர் மற்றும் ஜாப்ராபாத் பகுதியில் இன்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்கள் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலின்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். 2 வீடுகள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ஜாப்ராபாத்தில் போலீஸ்காரர்களை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காவலர் ஒருவர் பலியாகி இருக்கிறார்.

போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். துப்பாக்கி சூடு நடத்தியதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் பஜன்பூரா பகுதியிலும் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Loading...

இந்த சம்பவத்தால் வடகிழக்கு டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. ஜாப்ராபாத், மாஜ்பூர் பார்பர்பூர் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. அந்த ரெயில் நிலையங்களில் எந்த ரெயிலும் நிறுத்தப்படவில்லை. டெல்லியில் இன்று மீண்டும் வன்முறை வெடித்ததால் இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோருக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இருவரும் அகமதாபாத்தில் இருந்து உடனடியாக டெல்லி திரும்புகிறார்கள்.

Loading...

இந்நிலையில் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டம் என்கிற பெயரில் வெளிநாட்டை சேர்ந்த நபர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் வன்முறையில் ஈடு படுபவர்களுக்கு சம்பட்டி அடி கொடுக்க மோடி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இன்று கலவரக்காரர்கள் டெல்லியை முற்றுகையிட்டு போக்குவரத்து உள்ளிட்டவற்றை தடை செய்யவும், திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதால் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது, இனியும் போராட்டம் என்கிற பெயரில் மக்கள் கூடினால் அது மிக பெரிய சேதாரம் அல்லது மதம் ரீதியிலான மோதலுக்கு உள்ளாக்கும் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் மிகவும் அமைதியான முறையில் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் மோடிக்கு வன்முறை மூலம் எதிர்ப்பை காட்ட நினைத்தால் மீண்டும் குஜராத் மோடியாக மாறுவதற்கு அதிக நேரம் ஆகாது என அவரது ஆதரவாளர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending