Connect with us

சர்ச்சைகள்

டெல்லி துப்பாக்கியால் சுட்டவன் எந்த மதத்தை சேர்ந்தவன் அடையாளம் காணப்பட்டது பொய் செய்தியை பரப்பிய RK கைது செய்யப்படுவாரா?

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டம் இறுதியில் கலவரத்தில் முடிந்தது, மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் பாக்கிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என திருத்தம் செய்யபட்டது.

ஆனால் இந்திய முஸ்லிம்களோ அவர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என போராடி வருகின்றனர், இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு குடியுரிமை கொடுத்தால் நாடு நிம்மதியாக இருக்காது என்ற காரணத்தினால் மத்திய அரசு மூன்று நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுக்க படாது என சட்டம் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லி சிரியா, ஆபிகானிஸ்தான் போன்ற நாடுகளை போன்று பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது, நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 30 காவலர்கள் காயம் அடைந்தனர் ஒரு காவலர் மற்றும் 2 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

Loading...

இந்நிலையில் டெல்லியில் இளைஞன் ஒருவன் காவலர்கள் மற்றும் போராட்ட காரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினான், அவன் குறித்த புகைப்படம் வெளியான நிலையில் அவன் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே இடதுசாரிய பத்திரிகையாளர்கள் அவன் ஹிந்து தீவிரவாதி எனவும், rss நபர் எனவும் பரப்பினர். தமிழகத்தில் தன்னை மூத்த பத்திரிகையாளர் என கூறிக்கொள்ளும்.

Loading...

ராதாகிருஷ்ணன் அவர்களும் ஒரு சார்பு நிலை எடுத்து துப்பாக்கியால் சுட்டவன் RSS அமைப்பை சேர்ந்தவன் என ஒரு ட்விட்டை பகிர்ந்து இருந்தார் இந்நிலையில் டெல்லி காவல்துறை துப்பாக்கியால் சுட்டவனை அடையாளம் கண்டுள்ளது, அவன் பெயர் ஷாருக் எனவும் 33 வயது எனவும் தேடி வருவதாகவும் அறிவித்துள்ளது.

கலவரத்தால் இந்துக்கள் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளது, நேற்று இரவு இரண்டு தரப்பினருக்கும் சேதாரம் ஏற்பட்ட நிலையில் ராதாகிருஷ்ணன் போன்றோர் ஒரு சார்பு நிலை எடுத்ததும், அதை தவிர்த்து பொய் செய்தியை பரப்பியதையும் பலரும் கண்டித்து வருகின்றனர். மேலும் முக்கியமான நேரங்களில் இது போன்று அடையாளம் தெரிவதற்கு முன்பே போலி செய்தியை பகிர்ந்த RK மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவின் தலைநகரான டெல்லி கலவரத்தால் பற்றி எரியும் சூழலில் RK போன்றவர்கள் போலி செய்தியை பரப்பி தமிழகத்தில் உள்ள இந்துக்கள் மீது வன்மத்தை விதைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending