Connect with us

#24 Exclusive

21 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கிறதா வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு?

Published

on

21 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்கிறதா வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு?

டெல்லி :- இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இன்று (8 ) சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது தேர்தல் முடிவுகள் வருகிற 11- ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன, டெல்லி அனைத்து மாநிலங்களை விட சற்று வித்தியாசமான மாநிலம் என்றே கூறலாம்.

70 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 672 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர் பிரபல ஆங்கில தொலைக்காட்சி REPUBLIC வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மீ அபார வெற்றி பெரும் என கூறியுள்ளது கிட்டத்தட்ட கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆம் ஆத்மீ கட்சி 48முதல் 61 இடங்களையும் கைப்பற்றும் என்று குறிப்பிட்டுள்ளது.

Loading...

பாஜக 9 முதல் 21 இடங்களில் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதாகவும், காங்கிரஸ் 0 முதல் 1 இடங்கள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆம் ஆத்மீ கட்சிக்கு 51-52% வாக்குகளும், பாஜகவிற்கு 38-40%வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு 4-5% வாக்குகள் கிடைக்கும் எனவும் அந்நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் வெளியாகியுள்ளது.

Loading...

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக டெல்லியின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது மேலும் 52% வாக்குகளை பெற்றது ஆனால் தற்போது அதே நிலை சட்டமன்ற தேர்தலில் மாறியிருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

அதே நேரத்தில் சிந்தாமணி நிறுவனம் கடந்த காலங்களில் கருத்து கணிப்புகளை திறம்பட நடத்தி இருக்கிறது, பெரும்பாலும் அதன் கருத்துக்கணிப்பு முடிவுகள் 90% இதுவரை சரியாக இருந்துள்ளன, chinthamani5dots நிறுவனம் டெல்லி சட்டமன்ற தேர்தலை அடுத்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் அடிப்படையில் பாஜக 33 முதல் 37 இடங்களில் வெல்லும் எனவும், ஆம் ஆத்மீ 33 முதல் 37 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 0-3 இடங்கள் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது, வாக்குகள் அடிப்படையில் பாஜக 41-43 % எனவும், ஆம் ஆத்மீ 40-42%, காங்கிரஸ் 7முதல் 9% வாக்குகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending