Connect with us

#24 Exclusive

டெல்லி தேர்தலில் நடந்தது இதுதான் இனி வரும் காலத்தில் என்ன நடக்கும் பானு கோம்ஸ் சொல்லிய 4 முக்கிய தகவல் !

டெல்லி தேர்தல் முடிவுகள் எதை உணர்த்துகின்றன எனவும் இதன்மூலம் வரும்காலத்தில் என்ன நடக்கும் என்று சமூக செயற்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான பானு கோம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் குறிப்பிட்டவை பின்வருமாறு :-

ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றிருக்கிறது. BJP ..8 இடங்களை பிடித்து…முந்தைய 3 என்கிற எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டிருக்கிறதுது .
1 கோடியே 47 லட்சம் வாக்காளர்களை கொண்டது டெல்லி. இதில்.. வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களில் இருந்து டெல்லியில் குடியேறி இருப்பவர்களின் எண்ணிக்கை 60-65 %.

தேர்தலில் ..53% வாக்குகளை ஆப் கட்சியும், 39%-40% வாக்குகளை பிஜேபி யும் கைப்பற்றி இருக்கின்றன. இதில் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய அளவில் கணிசமான வாக்கு வங்கி என்பது உபி, பிஹாரை சேர்ந்த பூர்வாஞ்சலி சமூகம் மற்றும் மொஹதி சமூகங்கள். டெல்லியின் illegal colonies முழுவதுமே இத்தகைய மிகவும் ஏழைமையான மக்கள் வாழும் இடங்கள். கெஜ்ரியின் இலவசங்கள் ..இம் மக்களுக்கு நேரடியாக உடனடி தேவையை பூர்த்தி செய்திருக்கிறது.

Loading...

கெஜ்ரி…கடந்த 6 மாதங்களாகவே.. முக்கிய பிரச்சினைகள் எதிலுமே..மத்திய அரசையோ, மோடியையோ நேரடியாக விமர்சிக்கவில்லை . கூடவே ..soft Hinduthva -வையும் காட்டிக் கொண்டார்.
கெஜ்ரி …காஷ்மீரில் 370 நீக்கப்பட்டதை ஆதரித்தார். CAA, NRC- கு எதிரான போராட்டங்களை மெல்லியதான குரலில் ஆதரித்த கெஜ்ரி …மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி போலீஸ் ஏன் இன்னும் போராட்டக்காரர்களை விரட்டியடித்து Shaheen Bagh பகுதியை மீட்கவில்லை ? என்று பலத்த குரலில் கேட்டார்.

Loading...

ஆக..முக்கிய பிரச்சினையாக பார்க்கப் பட்ட …காஷ்மீர் 370, CAA & NRC போன்றவற்றை விமர்சிக்காத கெஜ்ரி…அம் மக்களின் வாக்குகளை பெற்றிருக்கிறார்.
CAA, NRC போன்றவற்றை கடுமையாக விமர்சித்து, போராடிக் கொண்டிருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் போன்றவை அம் மக்களால் முற்றிலுமாக புறம் தள்ளப்பட்டிருக்கின்றன.

பிஜேபி யை பொறுத்தவரையில்.. தன்னுடைய வெற்றியை 3 லிருந்து 8 ஆக உயர்திக் கொண்டிருக்கிறது. வாக்கு சதவிகிதத்தையும் உயர்த்திக் கொண்டிருக்கிறது.
இதில் பிஜேபி தன்னுடைய நோக்கத்தையும் தொடர்ந்து சாதித்துக் கொண்டே வருகிறது என்பது கவனிக்க தக்கது.
காங்கிரஸ் இல்லா இந்தியா என்பதை முழுமையாக சாதித்துவிடும் நிலை.

டெல்லி யூனியன் பிரதேசம்..சென்னை மாநகராட்சியை போன்ற ஒன்று. இந்த அளவுகளுக்குள்.. வெற்றி பெற்ற கெஜ்ரியின் உத்திகள்..பிற மாநிலங்களில் வெற்றி பெறுவது கடினம். அந்த அளவில்..கெஜ்ரியை ..டெல்லிக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைக்கும் உத்தியில் வெற்றி பெற்றிருக்கிறது பிஜேபி. கெஜ்ரி ..பிற மாநிலங்களில் வளர்வதை …அங்கங்கு உள்ள மாநில கட்சிகளே விரும்பாது என்னும் நிலை.
ஒவ்வொரு மாநில சட்டசபை தேர்தல்களிலும்…மாநிலக் கட்சியை எதிர்க்கொள்ளும் நேரடி போட்டியாளராக தேசியக் கட்சியான தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் உத்தி..

ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் இன்னொரு மாநிலத்தில் செல்வாக்கு இல்லாத நிலையில்..பாராளுமன்ற தேர்தலில்..எதிர்கட்சிகளின் கூட்டணி என்பது நெல்லிமூட்டையாக, ஒருவருக்கொருவர் பலன் தராத ஒன்றாக மாறி இருக்கும் நிலை..
ஹிந்துத்வஐ எதிர்கொள்வதற்காக ..பிரஷாந்த் கிஷோர் புண்ணியத்தில் மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றும் soft Hinduthva கட்சிகளாக மாறி வரும் நிலை சுவாரசியமானது. ஆனால் ….தொலைநோக்கில்..இக் கட்சிகளை முழுமையாக முடக்கிப் போட்டுவிடும் ஆற்றல் வாய்ந்தது.

இந்துத்துவ தளத்தில்….இந்துத்துவ கொள்கையை முழுமையாக பேசும் கட்சியோடு…திடீரென்று soft Hinduthva பேச முற்படும் கட்சிகளால் ஈடு கொடுக்க முடியாது.
ஆனால்…soft Hinduthva பேசியதன் விளைவாக…இக் கட்சிகளின் நிரந்தர வாக்குவங்கி அனைத்தும்..இந்துத்துவ அரசியலுக்கு மனதளவில் பழக்கப்பட்டுவிடும் மாற்றம் நிகழும். அதன் வழி …வாக்குகளும் இந்துத்துவ கட்சிக்கு எளிதாக இடம் பெயரும் வாய்ப்புகள் [vote transfer ] ஏற்படும்.

காங்கிரசை பொறுத்தவரையில்…கெஜ்ரியின் வெற்றியை கொண்டாடும் காங்கிரஸ் முதுபெரும் தலைவர்களே, அவ்வாறு பேசுவது ..காங்கிரஸ் கட்சியை குழி தோண்டி புதைக்கும் செயல் என்பதை உணராத பரிதாப நிலை. வாரிசு அரசியலில் இருந்து வெளியில் வராமல்..காங்கிரசை மீட்டெடுப்பது மிகவும் சிரமம். பலம் பெற்றிருக்கும் மாநில கட்சிகள் எதுவும் அதை விரும்பவும் விரும்பாது.
ஆக மொத்தத்தில்.. டெல்லி தேர்தல் முடிவுகள் ..பிஜேபி ன் செயல்பாடுகளுகளை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இன்ன பிற மாநில கட்சிகள் மக்களால் முற்றிலுமாக புறம் தள்ளப்பட்டிருக்கின்றன என்பதையும் வெளிச்சமிடுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending