Connect with us

#24 Exclusive

கோ ‘பட பாணியில் ‘வெடிகுண்டு ‘ கெஜ்ரிவால் போட்ட திட்டம்? காவல்துறை கண்டுபிடித்த நிலையில் கட்சியினருக்கு அவசரநிலை பிரகடனம் !!!

கோ படத்தில் முதல்வர் ஆவதற்கு வில்லன் தன்னுடைய அரசியல் எதிரிகளை மக்களிடையே கெட்டவர்களாக அடையாளம் காட்டுவதற்காக மேடையில் வெடிகுண்டு வைப்பது, தன் ஆட்களை வைத்தே துப்பாக்கி சூடு நடத்துவது, கடத்தல் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்.

அதே பாணியில் இந்த முறை டெல்லி தேர்தலுக்கு திட்டம் வகுத்த கெஜ்ரிவால் வகையாக சிக்கியிருக்கிறார், சென்ற 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது இளைஞர் ஒருவர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்தது பெரிய அளவில் பேசப்பட்டது, கெஜ்ரிவாலும் தன்னை அறைந்த இளைஞனை வீடு தேடி சந்தித்து ஏன் என்னை அறைந்தாய் என கேள்வி கேட்டு மக்கள் மனங்களின் மாற்றாக தன்னை காட்டினார்.

பல்வேறு மாநில மக்கள் வாழும் டெல்லியில் கெஜ்ரிவால் சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளில் 67 ல் வெற்றிபெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார், ஆனால் அதன் பிறகு சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி படு தோல்வி அடைந்தது, பாஜக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனால் கெஜ்ரிவால் தரப்பு பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட அரசியல் வியூகம் வகுப்பவர்களை அணுகியது.

Loading...

அதன் நீட்சியாக தான் டெல்லியில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர், அங்கு திடீர் என வந்த இளைஞர் ஜெய் ஸ்ரீராம் என கத்திகொண்டே துப்பாக்கியில் சுட்டார், அவரை அனைவரும் காந்தியை கொன்ற கோட்ஸே வாரிசு என கூறி இதற்கு காரணம் பாஜகதான் என குற்றம் சுமத்தினர், தமிழகத்தில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், பல அமைப்புகள் பாஜக மீது குற்றம் சுமத்தி கடுமையாக விமர்சனம் செய்தனர்.

Loading...

இந்நிலையில்தான் டெல்லி காவல்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது, ஜெய்ஸ்ரீராம் என கத்திகொண்டே துப்பாக்கி சூடு நடத்தியவன் ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்தவன் என்றும், அவன் கட்சியினருடன் குறிப்பாக கவுதம் கம்பிரை எதிர்த்து டெல்லியில் போட்டியிட்ட ஆம் ஆத்மீ வேட்பாளருடன் இணைத்து பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்படங்களை டெல்லி காவல்துறை வெளியிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டெல்லி மக்கள் பாஜக மீது பழியை போட கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞரை வைத்து அறைந்து நாடகம் நடத்தியதுபோல், இந்த முறை இவர்கள் கட்சியினரே நாடகம் செய்திருக்கிறார்கள் என கொதித்து எழுந்துள்ளனர், வழக்கமாக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் ஆம் ஆத்மீ கட்சியினர் சென்று வருவார்கள் ஆனால் இன்று காலையில் இருந்து ஆட்களை காணவில்லை.

மேலும் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடி வருகிறார், தனது கட்சியினருக்கு கெஜ்ரிவால் அவசரநிலையை டெல்லியில் பிரகடனம் செய்துள்ளதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன, ஆக மொத்தத்தில் எப்போதும் டெல்லி அரசியல் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்பே மாறும் அதுபோல் இந்த ஆண்டும் மாறும் என ஆம் ஆத்மீ கவலைப்பட தொடங்கியுள்ளது.

கோ படத்தில் வருவதுபோன்று ஆம் ஆத்மீ தொண்டர் இந்துத்துவவாதிபோல் துப்பாக்கி சூடு நடத்தியது காவல்துறை விசாரணையில் வெளிவந்ததால் இப்போது டெல்லியில் என்ன செய்வது என்று தெரியாமல் கெஜ்ரிவால் தனது கட்சியினருக்கு அவசரநிலையை பிரகடனம் செய்துவிட்டார் இதன் எதிரொலி வருகிற 11-ம் தேதி வெளிவர தொடங்கும்.

©TNNEWS24

Loading...

Trending