டெல்லி தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் தெரியுமா ? மக்கள் நம்பிக்கையை சற்றே இழந்த ஆம் ஆத்மி !

கடந்த 8 ஆம் தேதி நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்ட நிலையில் துவக்கம் முதலே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வந்தது ! தற்போதைய நிக்கவரப்படி ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும் , பாஜக 8 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்

Loading...

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . தேர்தல் முடிந்தபின் வெளியான கருத்துக்கணிப்புகளும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றிபெறும் என்று கூறிய நிலையில் அதுவே நடந்துள்ளது . வெற்றிபெற்ற இடங்களின் அடிப்படையில் ஆம் ஆத்மி மிக பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது .

கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 54.3 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி இந்த முறை 53.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது மறுமுனையில் கடந்த முறை 32.3 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக இந்த முறை 38.5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது அதேபோல கடந்த முறை 10 சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் இந்த முறை 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று போட்டியிட்ட 66 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளது .

Loading...

கடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் நல்லாட்சி செய்ததாக கூறப்பட்டாலும் 0.8 சதவீத வாக்கு குறைந்துள்ளது மறுமுனையில் பாஜக தனது வாக்கு சதவீதத்தை 6.5 சதவீதம் உயர்த்தியுள்ளது காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை முழுவதும் இழந்து அணைத்து தொகுதியிலும் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது ஆம் ஆத்மீ கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் போட்டியிட்ட நியூ டெல்லி தொகுதியில் 46758 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 25061 வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் 3220 வாக்குகளும் பெற்றுள்ளனர்

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*