குப்பையை கொட்டினால் ரூ.5000, எரித்தால் ரூ.1 லட்சம்: அதிரடி அபராதம் விதித்த நீதிமன்றம்

Loading...

டெல்லியில் காற்று மாசு என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று டெல்லி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது

இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் சில கடுமையான உத்தரவை பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன்படி டெல்லியில் குப்பைகளை எரித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கட்டுப்பாடு கட்டுமான பணிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் இதனை மீறுவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் என்றும் அறிவித்தனர்

Loading...

மேலும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டன. அதுமட்டுமின்றி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் வைக்கோலை எரிப்பதால்தான் அதிக காற்று மாசு ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில், விவசாயிகள் தாங்கள் வாழ்வதற்காக மற்றவர்களை பிரச்சனைக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது என்றும் இனிமேல் விவசாயிகள் வைக்கோலை எரித்தால் அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்

மேலும் காற்றில் மாசுவை அதிகமாகும் டீசல் ஜெனரேட்டர்கள் தடை என உத்தரவிட்ட நீதிபதிகள் குளிர்சாதன இயந்திரங்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்த.அர் மேலும் வாகனக்கட்டுப்பாட்டால் காற்றின் மாசு அளவு குறைந்துவிடுமா? வாகனக்கட்டுப்பாட்டால் எவ்வளவு மாசு குறைந்திருக்கின்றது என்பதை அறிக்கையாக அரசு வரும் வெள்ளியன்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகளின் இந்த அடுக்கடுக்கான உத்தரவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*