Connect with us

அரசியல்

டெல்லியில் கம்யூனிஸ்ட்கள் வாங்கிய வாக்குகளை பார்த்து வாயடைத்து போன எதிர்க்கட்சிகள் !

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 63 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி, பாஜக 7 தொகுதிகளை கைப்பற்றி எதிர் கட்சி வரிசையில் அமர்கிறது, காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத அளவிற்கு படு தோல்வியை சந்தித்திருக்கிறது.

ஆம் ஆத்மீ 53.7% வாக்குகளை பெற்றுள்ளது, பாஜக 38.44 % வாக்குகளை பெற்றுள்ளது, காங்கிரஸ் கட்சி 4.33% வாக்குகளை மட்டுமே பெற்று டெல்லியில் அடையாளம் தெரியாத அளவிற்கு அழிந்து விட்டது, இந்த சூழலில்தான் கம்யூனிஸ்ட்கள் வாங்கிய வாக்கு சதவீதம் மிக பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது அதாவது நோட்டாவிற்கு வாக்களித்தவர்கள் 10 ல் ஒருவர் கூட கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்கவில்லை.

டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கம்யூனிஸ்ட் மாணவர்கள் போட்ட ஆட்டத்திற்கு எதிரொலியாக மொத்தமாக கம்யூனிஸ்ட் என்ற கட்சியே இல்லாத அளவிற்கு துடைத்து எறிந்துவிட்டார்கள் டெல்லி மக்கள் கம்யூனிஸ்ட்கள் இரண்டு கட்சியும் சேர்த்தே அரை சதவிகித வாக்குகளை கூட பெறமுடியவில்லை.

Loading...

டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மீ கட்சி CAA குறித்தோ மோடி குறித்தோ எந்த விமர்சனமும் வைக்கவில்லை இந்த சூழலில் CAA எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மொத்தமாக டெல்லியில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்டு விட்டனர். மாணவர்கள் என்ற போர்வையில் சிலர் குடித்துவிட்டு போராட்டம் நடத்தியது, மாணவர் சங்கம் என்ற போர்வையில் கம்யூனிஸ்ட்கள் ஆட்டம் போட்டது.

Loading...

ஆகியவே கம்யூனிஸ்ட்கள் முழுவதும் அழிந்து போக காரணம் என கூறப்படுகிறது, சரி தலைப்பில் கம்யூனிஸ்ட்கள் வாங்கிய வாக்குகளை பார்த்து வாயடைத்து போன எதிர்க்கட்சிகள் என்று ஏன் சொன்னோம் என்று கேட்கிறீர்களா? ஒரு வாக்கு வாங்கவில்லை என்றாலே ஊடகம் விவாதங்களில் கொஞ்சம் கூட தனது கட்சி நிலையை நினைத்து பேசாமல் மத்திய அரசிற்கு அறிவுரை வழங்குவார்கள்.

இப்போது சில 100 ஓட்டுக்களை வாங்கிவிட்டதால் சொல்லவா வேண்டும், அருணன் தொடங்கி, கனகராஜ் வரை இன்றைய விவாதத்தில் வெளுத்து வாங்கிவிடுவார்கள் அதைத்தான் குறிப்பிட்டோம்.

Loading...

Trending