கொரோனாவின் கோரத்தாண்டவதால் மூடப்பட்ட ஜும்மா மசூதி மீண்டும் திறக்க முடிவு!!

கொரோனாவின் கோரத்தாண்டவதால் மூடப்பட்ட ஜும்மா மசூதி மீண்டும் திறக்க முடிவு!!

Loading...

இந்தியாவில் கொரோன தொற்று பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 18522 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,66,840 பேர் ஆகும். இந்தியாவில் அதிக பாதிப்புக்கு உள்ள மாநிலங்களான மகாராஷ்டிரா முதல் இடமாகவும், அதில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,9883 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் இரண்டாவது இடமாக தமிழகத்தில் 86,224 பேருக்கும், டெல்லியில் 85,161 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோன தொற்றால் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி இந்திய முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இருந்தன, இந்த ஊரடங்கு மூலம் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை மூடப்பட்டன. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ப சில விதி நெறிமுறைகளை பின்பற்றி சில தளர்வுகள் விதிக்கப்பட்டு இருந்தன, மற்றும் கடந்த ஜூன் 8 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவின் படி உணவகங்கள் மற்றும் மால்கள்,

Loading...

வழிபாட்டுத்தலங்கள் ஆகியவை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள ஜும்மா மசூதி இமாம், சையத் அகமது புகாரின் செயலர், அமானுல்லா, தொற்றால் சிகிக்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களின் நலம் கருதி ஜும்மா மசூதியை தற்காலிகமாக மூட வேண்டும் என அரசு தெரிவித்து இருந்தன.

தற்போது கொரோன வைரஸ் தொற்று தடுப்பு மக்களுக்கு பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், மீண்டும் ஜும்மா மசூதியில் மக்கள் தொழுகை நடத்தவும், மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மசூதியில் பின்பற்றி வரும் ஜூலை 4 ஆம் தேதி மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*