Connect with us

#24 Exclusive

BREAKING பொக்ரானில் டிச – 20-27 டேன்ஜர் பகுதியாக அறிவித்தது இந்தியா உலகம் முழுவதும் பரபரப்பு !

Published

on

பொக்ரான் : பொக்ரான் பகுதியில் வருகின்ற டிசம்பர் 20-27 ஆகிய தேதிகள் அதிகப்படியான டேன்ஜர் பகுதி என உலகிற்கு இந்தியா அறிவித்துள்ளது, இதனால் 15 km தொலைவிற்குள்ளான வான் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை உலகின் டேஞ்சர் குறித்த வரைபடங்களை தொகுத்து வழங்கும் அமெரிக்காவின் D ATIS நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் மீண்டும் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்று உலகம் முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர், அணு ஆயுத சோதனை செய்வதன் மூலம் இந்தியா உலகிற்கு தன்னுடைய இராணுவ வலிமையையும் இராணுவ வல்லரசு அடையாளத்தையும் மீண்டும் பிரகடனம் செய்ய வாய்ப்பு இருப்பதாக பரவலாக கூறப்படுகிறது.

பொக்ரான் அணு ஆயுத சோதனை வரலாறு :-
காலம் கடந்தது , அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் அச்சுறுத்திட, இந்திய பாதுகாப்பு அளவுக்கு அதிகமாக  மோசமடைவதால் நாம் நிச்சயமாக அணுகுண்டு சோதனை ஒன்றினை நடத்தியே தீரவேண்டும் என இந்திய பாதுகாப்பு ஆலோசகர்களும் , அணு விஞ்ஞானிகளும் வற்புறுத்திட ஒருவழியாக சம்மதம் தெரிவித்தார் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ். அவரது அனுமதியின்பேரில் அணுகுண்டு சோதனைக்கான ஏற்பாடுகள் பொக்ரானில் தொடங்கின . ஆனால் மேலே பறந்துகொண்டிருந்த செயற்கைகோளின் கேமராவில் நமது செயற்பாடுகள் பதிவாக, அப்போதய அமெரிக்க அதிபர் கிளிண்டனுக்கு அந்த பதிவுகளை அனுப்பியது அமெரிக்க உளவுத்துறை .
கிளிண்டனின் எதிர்ப்பினால் அந்த அணுகுண்டு சோதனை முயற்சியை கைவிட்டார் நரசிம்மராவ் .

Loading...

ஏற்கனவே அமெரிக்காவிடம் மாட்டிக்கொண்டாலும் இந்தியாவின் திறனை உலகறிய வேண்டும் என்றால் அதற்கு எப்படியாவது அணுகுண்டு சோதனை நடத்தியே ஆகவேண்டும் என்பதனை உணர்ந்திருந்தார் பிரதமர் வாஜ்பாய் . மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் ஆக அப்துல்கலாம் இருந்தார் .1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் கண்ணசைக்க அப்துல்கலாம் தலைமயிலான குழு மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனைக்கு தயாரானது .
பொக்ரான் அணுகுண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டதில் ஆரம்பித்த அப்துல்கலாம் அவர்களின் வளர்ச்சி குடியரசுதலைவர் பதவிவரை அவரை உயர்த்தியது

Loading...

 ஏற்கனவே ஒருமுறை அமெரிக்க செயற்கைகோள்களின் மூலமாக மாட்டிக்கொண்டோம் என்பதனால் இவர்களின் முதல் சவால் செயற்கைகோளின் பார்வையில் படாமல் சோதனையை நடத்துவது தான் .அடுத்தது , உளவு பார்க்கும் அமைப்புகளிடம் இருந்தும் ஒட்டுக்கேட்கும் நாடுகளிடம் இருந்தும் அணுகுண்டு நடத்தப்படுவது தொடர்பான தகவல்கள் தெரியாமல் பாதுகாப்பது .ஏற்கனவே செயற்கைகோள்கள் இயங்கும் விதம் குறித்த அறிவினை பெற்றவராக கலாம் இருந்தபடியால் , செயற்கைகோள் பொக்ரான் பகுதிக்கு மேலே பறக்காத கால நேரத்தை கணக்கிட்டு கூறினார் . பெரும்பாலும் இரவு நேரமாகவே அமைந்த அந்த நேரங்களில் கடுமையாக உழைத்து அணுகுண்டு சோதனைக்கு தேவையான வேலைகளை செய்தனர் . மீண்டும் செயற்கைகோள் பொக்ரான் பகுதிக்கு வரும் நேரத்திற்கு முன்பாக வேலைகளை முடித்துவிட வேண்டும்  . அப்படியொரு வேலை நடந்ததற்கான அடையாளம் கூட தெரியக்கூடாது .

அடுத்தது உளவு பார்க்கும் அமைப்புகளிடம் இருந்து தப்பிக்க கலாம் உள்ளிட்ட அவரது குழுவில் இடம்பெற்ற அனைவரது பெயர்களும் மாற்றப்பட்டன . பேசிக்கொள்ளும்போது புனைப்பெயர்களை கொண்டே அழைத்துக்கொண்டனர் . கலாம் அவர்களின் பெயர் கலோனல் பிருதிவிராஜ் .
ராணுவ பயிற்சி நடைபெறுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்திட ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர் . பல ஏவுகணைகள் செலுத்தப்பட்டு புகை மண்டலமாக தோன்றும்படி செய்யப்பட்டன . இதனை செயற்கைக்கோள் மூலமாக கண்காணித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோ போர் ஒத்திகை நடைபெறுகிறதென்று நம்பிவிட்டார்கள்.

 மே 10 அன்று அப்துல்கலாம் அவர்கள் வாஜ்பாய் அவர்களுக்கு “நாங்கள் தயார் ” என செய்தியனுப்ப மே 11 அன்று பிற்பகலில் வரலாற்று சிறப்புமிக்க பொக்ரான் அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்டது .
உலகநாடுகளின் நில அதிர்வு கருவிகள் நம் அணுகுண்டு சோதனையின் மூலமாக ஏற்பட்ட நில அதிர்வுகளை பதிவு செய்ய அதிர்ந்தன உலக நாடுகள் , குறிப்பாக அமெரிக்கா . அமெரிக்க உளவுத்துறையும் செயற்கைகோள் கண்காணிப்பும் இதில் தோற்றுப்போனதானதாக கருதியது . அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வாஜ்பாய் இதை மற்றவர்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் நாமும் இனி அணு ஆயுத நாடுதான் என முழங்கினார்  பல ஆண்டுகளாக இந்தியாவை தடுத்து வைத்திருந்த பல நாடுகளின் தடைகள் இந்த பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றியில் சிதறிப்போயின . (credit – பாமரன் கருத்து) இதுதான் பொக்ரான் அணு ஆயுத சோதனையின் வரலாறு.

ஏன் உலக நாடுகள் அச்சம் :- முன்னாள் இந்திய குடியரசு தலைவரும் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல் காலம் அவர்கள் இந்தியா 2020 – ல் வல்லரசு நாடாக மாறும் என்று அறிவித்திருந்தார், இந்த சூழலில் இராணுவ வல்லரசு நாடாக பிரகணப்படுத்த 2020 -ம் ஆண்டை அணு ஆயுத சோதனைக்கு பயன்படுத்த போகிறதா என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது, அதே நேரம் வேறு ஏதேனும் போர் ஒத்திகைக்காக டேஞ்சர் சோன் என பொக்ரான் பகுதி அறிவிக்கப்ட்டுள்ளதா என வருகிற 20-27 அன்று தான் தெரியவரும். காத்திருந்து பார்க்கலாம் ஏதேனும் அணு ஆயுத சோதனையா அல்லது சாதாரண போர் ஒத்திகையா என ! ( தமிழில் முதல் தகவல் TNNEWS24 )

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending