இன்று மட்டும் இத்தனை பேர் பலியா? குறையாத கொரானா எண்ணிக்கை!

இன்று மட்டும் இத்தனை பேர் பலியா? குறையாத கொரானா எண்ணிக்கை!

Loading...

தமிழகத்தில் இன்று மட்டும் 763 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தடுப்பு நடவடிக்கைகள் பலவற்றை தமிழக அரசு மேற்கொண்டாலும் நேர்மறையான முடிவுகள் இன்னும் வரவில்லை. 4 வது கட்ட பொது ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading...

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை  557 ஆக உள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மட்டும் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. இந்த மாதம் 31 ஆம் தேதி வரை நான்காவது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்புகள் குறையாததால் மேலும் நீட்டிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*