மொட்டையடித்துக் கொண்ட டேவிட் வார்னர் – யாருக்காகத் தெரியுமா?

மொட்டையடித்துக் கொண்ட டேவிட் வார்னர் – யாருக்காகத் தெரியுமா?

Loading...

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்காக தனது தலைமுடியை காணிக்கையாக்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1100 ஆக உயர்ந்துள்ளது.

Loading...

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும். அவர்களுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் தனது தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டுள்ளார். இது சம்மந்தமாக புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*