Connect with us

முகப்பு

சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் யார் ? வார்னரா ? வில்லியம்சனா ?

ஐபிஎல் 13 வது சீசனில் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளில் 2015ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத் அணிக்கான ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். அவர் இதுவரை விளையாடியுள்ள 4 சீசன்களில் மே 500 வருடங்களுக்கு குறையாமல் எடுத்து பேட்டிங்கில் அளப்பரிய பங்களிப்பை தந்துள்ளார்.

இதனால் அவர் 2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பால் டேம்பரிங் செய்ததால் ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால் தந்த கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அந்த அணியின் மற்றொரு வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது.

Loading...

இதையடுத்து கடந்த ஆண்டு ஐபிஎல் வார்னர் சிறப்பாக விளையாடிதால் தற்போது மீண்டும் அவர் சன்ரைசர்ஸ் அணி கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூட டேவிட் வார்னரின் சிறப்பான பங்களிப்பை அடுத்து எதிர்காலத்தில் அவரை கேப்டனாக நியமிப்பது குறித்து ஆலோசிப்போம் என அறிவித்துள்ளது.

Loading...
Loading...

Trending