திருமழிசை காய்கறி மார்க்கெட்… சொதப்பும் வியாபாரம் – தினமும் விணாகும் காய்கறிகள்!

திருமழிசை காய்கறி மார்க்கெட்… சொதப்பும் வியாபாரம் – தினமும் விணாகும் காய்கறிகள்!

Loading...

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தற்காலிக மார்க்கெட்டாக தொடங்கப்பட்டுள்ள திருமழிசை மார்க்கெட்டில் வியாபாரம் மந்தமாக உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் சென்னையில் அதிகமானக கொரோனா வைரஸ் தொற்று பரவிய போதும், கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த சிலரின் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததால் மார்க்கெட் மூடப்பட்டு தற்காலிக மார்க்கெட்டாக திருமழிசையில் தொடங்கப்பட்டுள்ளது.

Loading...

அங்கு மார்க்கெட் தொடங்கப்பட்டதில் இருந்து வியாபாரம் மந்தமாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. காய்கறிகளின் விலையும் மிகவும் குறைவானது. இது வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. காய்கறிகளை சேமித்து வைக்க அங்கு சேமிப்புக் கிடங்கு இல்லாததால் தினமும் 2 லட்சத்துக்கு மேல் காய்கறிகள் வீணாவதாக சொல்லப்படுகிறது.

திருமண விழாக்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் ஊரடங்கு காரணமாக தற்போது நடைபெறாததால் காய்கறிகள் தேவை குறைந்துள்ளது. அதனால் வியாபாரமும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். மேலும் டாடா ஏசி போன்ற வேன்களில் வியாபாரிகல் காய்கறிகளை எடுத்துச் சென்று விற்பனை செய்தாலும் போலீஸார் பிடித்து அபராதம் வசூல் செய்வதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3919 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*