Connect with us

#24 Exclusive

டி ஆர் பாலு திமுகவில் இருந்து விலகல்? கனிமொழிதான் காரணமா? உறுதி படுத்துவது யார் !!

சென்னை :- திமுக முதன்மை செயலாளர் பதவி என்பது அக்கட்சியில் மிக முக்கியமான பதவிகளில் ஒன்று, பொருளாளர் பதவியை விட உயர்ந்த பதவி என அக்கட்சி கடந்த கால தலைவர்கள் பதவியின் அடிப்படையில் கூறப்படுகிறது.

இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு வசம் இருந்த முதன்மை செயலாளர் பதவி அவரிடம் இருந்து முன்னாள் அமைச்சர் கே என் நேரு வசம் ஒப்படைக்க பட்டது, ஒருவருக்கு இரண்டு பதவிகள் இல்லை என்ற முடிவின் அடிப்படையில் பாலுவிடம் இருந்து முதன்மை செயலாளர் பதவி நீக்க பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு அதுமட்டும் காரணமில்லை என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் ராகுல் காந்திக்கு எதிராக ரேப் இன் இந்தியா என பேசியதற்காக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு குரல் கொடுக்க, நாடாளுமன்றம் சம்பித்தது இதில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழியை நோக்கி இதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா என பேச? கனிமொழி சபையில் பேச எழுந்தார் அப்போது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு கனிமொழியிடம் வந்து உட்காரும்மா என்றார்.,,

Loading...

ஆனால் அவரோ இருங்கள் என்னை தானே கேட்கிறார்கள் என்று சலிப்பாக கூறி எழுந்து பதில் அளித்தார், இதனால் இருவரிடையே இருந்த உரசல் வெளிப்படையாக தெரியவந்தது , அன்றில் இருந்தே இருவருக்கும் இடைவேளை இருப்பதாக வெளிப்படையாக பலர் கூறிவந்த நிலையில் தற்போது டி ஆர் பாலு வசம் இருந்த கட்சியின் முக்கிய பதவியான முதன்மை செயலாளர் பதவி பறிக்கப்பட்டு இருப்பது இதன் பின்னனியில் கனிமொழி இருக்கலாம் என பேசப்படுகிறது.

Loading...

அதே நேரம் டி ஆர் பாலு திமுகவில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன ஆனால் அவை எந்த அளவு உண்மை என தெரியவில்லை, மேலும் டி ஆர் பாலு திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் எனவே அவர் வெளியேறினால் நிச்சயம் திமுக சட்டமன்ற தேர்தலில் தஞ்சை பகுதியில் கடும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. டி ஆர் பாலு திமுகவில் இருந்து விலகல் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவும் நிலையில் அதனை மறுப்பதோ உறுதி படுத்துவதோ யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன?

©TNNEWS24

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending