மறுஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்! 90ஸ் கிட்ஸ்கள் கேட்கும் இந்த நிகழ்ச்சி எப்போது?

Loading...

தொலைக்காட்சிகளில் பழைய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப் பட்டு வரும் நிலையில் லொள்ளு சபா நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்யவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ள நிலையில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. சினிமாவைப் போல அல்லாமல் சீரியல்கள் வாரத்தின் 6 தினங்களில் ஒளிபரப்பப் படுவதால் அதன் படப்பிடிப்பு பெரும்பாலான நாட்களில் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

Loading...

இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் இப்போது தொலைக்காட்சி சேனல்களுக்கான புது எபிசோட்கள் கைவசம் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இதுவரை கைவசம் இருந்த எபிசோட்களை ஒளிப்பரப்பி வந்த தொலைக்காட்சி சேனல்கள் தொடர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

புதிய எபிசோட்கள் இல்லாமல் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வருகின்றனர். மேலும் சில தொலைக்காட்சி சேனல்கள் பழைய பிரபலமான சீரியல்களை மீண்டும் ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளன. இதனால் தொலைக்காட்சி பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை கனிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் பழைய பிரபலமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் 90களில் தூர்தர்ஷனில் மிகவும் பிரபலமாக இருந்த ராமாயணம் சீரியல் ஏற்கனவே ஒரு நாளைக்கு இரண்டு எபிசோட்கள் வீதம் ஒளிபரப்பப் பட்டு வருகிறது. இந்நிலையில் 90ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஹீரோ சீரியலான சக்திமான் மீண்டும் நாளையில் இருந்து ஒளிபரப்பப்பட உள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தற்போதுள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பார்க்கும் விதமாகவே உள்ளது.

அதனால் இளைஞர்களோ தங்களக்கு பிடித்த நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியை மறு ஒளிப்பரப்பு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிசந்திரன் அஸ்வின் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*