தாய் செய்யக்கூடிய செயலா இது !! கள்ளக்காதல் படுத்தும் பாடு !

மேட்டுப்பாளையம் :- அதிகரித்து வரும் கள்ளக்காதல் சம்பவங்கள் இறுதியில் கொலையில் முடிந்துவிடுகின்றன ஒருபுறம் கணவன் மனைவி இரண்டு தரப்பிலும் அரங்கேறும் கொடூரங்கள் இறுதியில் யாரேனும் ஒருவர் உயிருக்கு உலைவைத்து விடுகின்றன, ஆனால் சில வக்கிர புத்தி கொண்ட மிருகங்கள் தங்கள் ஆசைக்காக ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்து விடுகின்றனர்.

Loading...

அப்படி ஒரு சம்பவம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அரங்கேறியுள்ளது, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் – ரூபிணி தம்பதியினருக்கு 3 வயதில் தேவி ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தால், கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு மோதல்கள் உண்டாக ரூபிணி கணவன் வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியேறி கடந்த ஆண்டு, மே மாதம் 26 ம் நாள் தனியாக சென்றுவிட்டாள்.

அதன்பிறகுதான் அரங்கேறியது கொடூரம் ரூபிணிக்கு சற்குணம் என்ற தன்னைவிட வயதில் குறைவான சற்குணம் என்பவனுடன் தொடர்பு இருந்துள்ளது, அவனுடன் ஒன்றாக வாழ்வதாக திட்டமிட்டு கோவை சரவன்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு தேடியுள்ளனர் அப்போது வீடு எங்கும் கிடைக்காததால் அன்று இரவு அரசு பள்ளி ஒன்றில் தங்கி உள்ளனர், அப்போது இருவரும் ஒன்றாக இருக்க எண்ணிய போது இனி நமது வாழ்க்கைக்கு இந்த குழந்தை தேவையில்லை என சற்குணம் கூறியுள்ளான்.

Loading...

அதற்கு கல்நெஞ்சக்காரி ரூபிணியும் சம்மதம் தெரிவிக்க பிஸ்கேட்டில் விஷம் தடவி கொடுத்துள்ளனர், குழந்தை வயிறு வலியால் துடிக்க வாயில் துணியை சுற்றி அருகில் உள்ள முற்புதற்குள் தூக்கி வீசிவிட்டு சற்குணம் பெங்களூரும், ரூபினி மீண்டும் கணவன் வீட்டிற்கும் சென்றுள்ளாள், அங்கு குழந்தை எங்கே என கேட்டதற்கு பஸ்ஸில் காணாமல் போய்விட்டது என பதில் சொல்ல காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறை விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான தகவல் கொடுத்த ரூபிணி மீது சந்தேகம் வர காவல்துறையினர் விசாரித்ததில் இவளே திட்டம்போட்டு கொலை செய்தது தெரியவந்தது, அதனை தொடர்ந்து ரூபிணியை கைது செய்த காவல்துறையினர், சற்குணத்தை தற்போது 7 மாதங்களுக்கு பிறகு பெங்களூரில் வடஇந்திய கம்பெனியில் அடையாளத்தை மாற்றி வேலை செய்தவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

கள்ளக்காதல் சம்பவத்தால் குழந்தைகள் கொலை செய்யபடுவது கடந்த ஆண்டு தமிழகத்தில் தொடர்கதையாக மாறிவருவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ©TNNEWS24

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 2699 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*