வீடு தேடிவரும் ஆல்கஹால்… கேரள அரசின் திட்டம் – கோர்ட் போட்ட தடா!

வீடு தேடிவரும் ஆல்கஹால்… கேரள அரசின் திட்டம் – கோர்ட் போட்ட தடா!

Loading...

கேரளாவில் வீடு தேடிவரும் மது என்று அறிவிக்கப்பட்டு இருந்த திட்டத்துக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் பாதிக்கபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது வருகிறது. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்க இந்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்துள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

Loading...

இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் குடிமகன்கள் குடிப்பதற்காக டாஸ்மாக் கடைகளை உடைத்து உள்ளே புக முயற்சி செய்து வருகின்றனர். மேலும் சில இடங்களில் மதுபாட்டில்கள் திருடப்பட்டும் உள்ளன.

இதே போன்ற சம்பவங்கள் கேரளாவிலும் அதிகமாக நடந்து வருகின்றன. ஆனால் கேரளாவில் மது கிடைக்காததால் 7 பேர் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இதே போல தமிழகத்திலும் 5 பேர் வரை தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த தற்கொலைகள் இரு மாநில அரசுக்கும் மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.

இதனையடுத்து கேரள முதல்வர் மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மதுபானங்களை வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதை இந்திய மருத்துவக் கவுன்சில் மறுத்துள்ளது. மேலும் கேரள மருத்துவர்களிடம் யாருக்கும் இதுபோல பரிந்துரை செய்யக் கூடாது என உத்தரவுப் பிறப்பித்துள்ளது.இந்நிலையில் கேரள உய்ர்நீதிமன்றம் கேரள அரசின் இந்த முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் கேரளாவில் உள்ள மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*