Connect with us

#24 Exclusive

திமுகவினர் மீதான வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published

on

திருத்துறைப்பூண்டியில்  செப்.25: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கைதுசெய்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 10 பேர் மீதானவழக்கில் அவர்களை விடுதலை செய்து திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தி.மு.க ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து முத்துப்பேட்டை திமுகஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் பாண்டி கடைத்தெருவில் சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், மாவட்டபிரதிநிதிகள்  கண்ணன், கோவிந்தராஜ் ஒன்றியதுணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள்ஊராட்சி மன்றதலைவர் முத்துக்குமார், ஊராட்சி செயலாளர் சதீஷ், ஒன்றியபிரதிநிதிகள்ராமசாமி, சங்கர் , வார்டு செயலாளர் நம்பிராஜன், ஒன்றியஇலக்கிய அணி அமைப்பாளர் ஜீவானந்தம் உட்பட பத்து  பேர் மீது எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்தவழக்கு திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது பத்து பேருக்கு திமுகவக்கீல்கள்தர்மராஜன், செல்வரத்தினம் ,பாஸ்கர் , குமணவள்ளல் ஆகியோர்கள் ஆஜராகி வாதாடி வந்தனர். இந்தவழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்தநீதிபதி காலிதா பத்து பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார் .

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share