Connect with us

சினிமா

உங்கள் இஷ்டத்துக்கு நீதிமன்றம் செயல்பட வேண்டுமா ? முருகதாஸால் கடுப்பான நீதிபதி!

உங்கள் இஷ்டத்துக்கு நீதிமன்றம் செயல்பட வேண்டுமா ? முருகதாஸால் கடுப்பான நீதிபதி!

தர்பார் பட நஷ்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை முருகதாஸ் வாபஸ் பெற்றதால் நீதிபதிகள் அவருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தர்பார் படத்தை வாங்கி விநியோகித்த சிலர் தங்களுக்கு அந்த படத்தால் நஷ்டம் எனக் கூறி ரஜினியை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் அது பலிக்காமல் போகவே இயக்குனர் முருகதாஸை அவரது இல்லம் மற்றும் அலுவலகத்தில் சந்திக்க முயன்றனர். ஆனால் முருகதாஸ் அவர்களை சந்திக்கவில்லை.

Loading...

இந்நிலையில் தன் அலுவலகம் மற்றும் வீட்டுக்கு சிலர் வீட்டுக்கு வந்து சிலர் மிரட்டுவதாகவும் அதனால் தனக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது சம்மந்தமாகப் பதிலளிக்க சொல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி பி ராஜமாணிக்கம் என்பவர் செய்துவந்தார்.

Loading...

இதையடுத்து நீதிமன்றத்தில் தங்கள் அறிக்கையைக் காவல்துறை சமர்ப்பித்தது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை இன்று வந்த போது முருகதாஸ் வழக்கு சம்மந்தமான புகாரை வாபஸ் பெற்றுவிட்டார் என நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு கோபமான நீதிபதி ‘நீங்கள் இஷ்டப்படும் படி நீதிமன்றம் செயல்பட வேண்டும் என நினைக்கிறீர்களா?’ எனக் கோபமாக கேள்வி எழுப்பி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

இடையில் வழக்கை வாபஸ் வாங்கும் அளவுக்கு என்ன நடந்தது என சினிமா ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending