Connect with us

Uncategorized

வடிவேலு பட பாணியில் 100 கோடியை சுருட்டிய தம்பதி என்ன அழகா ஏமாத்துறாங்க பாருங்களே?

Published

on

வடிவேலு பட பாணியில் 100 கோடியை சுருட்டிய தம்பதி என்ன அழகா ஏமாத்துறாங்க பாருங்களே?

வடிவேலு ஒரு படத்தில் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி என்று ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டி, பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவார் அதே பாணியில் சிறிதாக மாற்றம் செய்து ஒரு தம்பதியினர், 100 கோடியை அசால்ட்டாக ஆட்டையை போட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி இந்துமதி. இவர்கள் இருவரும் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஆர்.எம்.வி. குரூப் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவந்துள்ளனர்.எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு வருடத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் இரண்டு லட்சம் கிடைக்கும் என்றும், ஒரு கோடி முதலீடு செய்தால் இரண்டு கோடி கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர்.

பின்னர் சதுரங்க வேட்டை படத்தில் வருவது போன்று பணத்தினை கட்டு கட்டாக அடுக்கி வைத்து இதுபோல் நீங்களும் சம்பாரிக்க வேண்டாமா என ஆசை வார்த்தை கூறியுள்ளனர், இவர்களது ஏமாற்று வலையில் சிக்கிய பலர் இதுவரை , 100 கோடி வரை முதலீடு செய்திருக்கிறார்கள்.

பின்னர் தம்பதியினர் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதை எண்ணி சந்தேகம் அடைந்த முதலீட்டாளர் ஒருவர் சந்தேகம் அடைந்து சேலம் மாநகர போலிஸிடம் புகார் கொடுத்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் வழக்கை விசாரிக்கத் தொடங்கினர்.

இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மணிகண்டனின் நண்பர்களிடம் நடத்திய விசாரனையில் அவர்களின் மோசடி திட்டம் அம்பலம் ஆனது.
பின்னர் தூபாயில் இருந்து சுற்றுலா சொன்று விட்டு திரும்பி வந்த மணிகண்டன் மற்றும் இந்துமதியைப் போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணயில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பொதுமக்களை ஆசை காட்டி பெற்ற கோடிக்கணக்கான பணத்தில், அந்த தம்பதி துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக முதலீட்டாளர்களை அழைத்து வந்த இடைத்தரகர்களையும், அவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 2 சொகுசு கார்கள், பத்து பவுன் செயின், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் வழக்கு சம்பந்தமான போலி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில், மணிகண்டன், இந்துமதி தம்பதிக்கு உதவியாக இருந்தவர்களை பிடிக்க போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். எத்தனை திரைப்படங்கள், அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு மக்கள் யாராவது தொடர்கதையாகவே இருக்கிறது.

©TNNEWS24

Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Advertise this site mail us: admin@tnnews24.com © 2019 tnnnews24.com

Share