Connect with us

#24 Exclusive

கொரனோ வைரஸ் பரவி வரும் நிலையில் ‘ரஷியா’ எடுத்த முடிவால் சீனா கடும் அதிர்ச்சி !

சீனாவில் உருவான கொரனோ வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி வருகிறது, சீனாவில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பியதன் மூலமாக கொரனோ வைரஸ் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இதனையடுத்து ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சீனாவில் இருந்து வரும் மக்களை முழுவதும் சோதனை செய்தே அனுமதிக்கின்றனர், உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளது, இந்நிலையில் அனைத்து நாடுகளும் தங்கள் நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவரும் வேலையில் ரசியா சீனாவுடனான 4000 கிலோ மீட்டர் எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது.

கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டின் கையெழுத்திட்டுள்ளார்.  சீன நாட்டவர்களுக்கு வழங்கி வந்த மின்னணு விசாக்களையும் நிறுத்த உள்ளதாக  ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

Loading...

அதேபோல், ரஷ்ய நாட்டவர்கள் சீனா செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவில் இருக்கும் ரஷ்யர்கள், தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும்கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து சீனா வெளியுறவுத்துறை அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது, சக கம்யூனிஸ்ட் நாடான ரசியா நேரடியாக எல்லையை மூடியது மட்டுமல்லாம் தங்கள் நாட்டினை சேர்ந்தவர்களை தூதரகம் மூலம் மீட்கவும் முயற்சியை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்துவதாக சீனாவின் பத்திரிகைகள் குற்றம் சுமத்தியுள்ளன.

Loading...

கொரனோ வைரஸ் பாதிப்பை தொடர்ந்து சீனாவை வல்லரசு நாடுகள் கைவிட்டு வருவதாகவும், குறிப்பாக சீனா வேண்டுமென்றே கொரனோ வைரஸை பரப்புவதாகவும், பயோ வாரில் சீனா ஈடுபட்டு வருவதாகவும் உலக நாடுகள் சந்தேகிப்பதால் ரஷியாவும் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

©TNNEWS24

Loading...

Trending