இன்று நிலவரப்படி: உலக அளவில் ஒரு கோடியை நெருக்கும் கொரோன பாதிப்பு!!

இன்று நிலவரப்படி: உலக அளவில் ஒரு கோடியை நெருக்கும் கொரோன பாதிப்பு!!

Loading...

சர்வதேச நாடுகளை உருக்குலைந்த கொரோன வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலக நாடுகளில் அதிக பாதிப்பு உள்ள நாடுகள் ஆனா அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்ய, ஐரோப்பிய ஆகிய நாடுகளில் கொரோன பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5,043 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தற்போது உலக அளவில் கொரோன தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த

எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. மற்றும் இதில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 5,01,262 ஆக உயர்ந்துள்ளது. மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 54,57,898 பேர் ஆகும். கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடு முழுவதும் பரவ தொடங்கியது, இந்நிலையில் கொரோன பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா ஆகும். அமெரிக்காவில் கொரோன நோய்த்தொற்று உறுதி

Loading...

செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் 43,581 பேருக்கு கொரோன நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதுவரை அமெரிக்காவில் கொரோன தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 25,96,537 -ஆகவும், பலி எண்ணிக்கை 1,28,152-ஆகவும் உயர்ந்துள்ளது.அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 10,81,437 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரோன தொற்றில் இரண்டாவது இடத்தில் பிரேசில் நாடாகும் அதில் உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை- 13,15,941 பேர் ஆகவும், மற்றும் பலி எண்ணிக்கை – 57,103 பேர் ஆகவும் அதிகரித்து உள்ளது. தற்போது உலக அளவில் மூன்றாவது இடத்தில் ரஷ்யா நாடாகும். கொரோன தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,27,646 பேர் ஆகவும், மற்றும் பலி எண்ணிக்கை 8,969

பேர் ஆக அதிகரித்து உள்ளது. மற்றும் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோன பாதிப்பில் 18,552 பேர் பதிவாகி உள்ளது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி 5 லட்சத்தை தாண்டிய நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து 953 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்றில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை-15685 ஆகும். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீட்பு விகிதம் 58.13 சதவீதமாக உள்ளது என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*