கொரோனா யுத்தம் மோடி அமிட்ஷா ஸ்டாலினிடம் பேசியது ஏன்? ஆட்டம் ஆரம்பம் !!

கொரோனா யுத்தம் மோடி அமிட்ஷா ஸ்டாலினிடம் பேசியது ஏன்? ஆட்டம் ஆரம்பம் !!

Loading...

கொரோனவில் இருந்து இந்தியாவை மீட்க மத்திய அரசு துடியாய் துடித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது 21 நாள் ஊரடங்கில் பாதி நாட்களை கடந்த நிலையில் தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலம் பெருமளவு கொரோனா தொற்று பரவியது அனைவரின் முயற்சியிலும் தடங்களை கொடுத்தது.

எனினும் அவர்களை தனிமை படுத்துவதன் மூலம் வேறு யாருக்கும் கொரோனா பரவ கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது, இருப்பினும் தற்போது மத்திய அரசு கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஏப்ரல் 14 ற்கு முன்பு கிள்ளி எறியப்பட்டால் உலகில் பொருளாதார ரீதியாகவும், மருத்துவ நடவடிக்கைகள் ரீதியாகவும் பலம் பெறலாம் என நினைக்கிறது.

Loading...

இதன் பின்னணியில்தான் நாட்டின் அனைத்து தலைவர்களுடனும் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவருகிறார், பிரதமர் மோடி ஊரடங்கு அறிவித்தவுடனேயே திமுக அதை ஆதரித்தது.ஸ்டாலின் அதை முழுவதுமாக ஆதரித்தவுடன் காங்கிரசின் இந்திய அளவு அரசியலே இதில் முடிந்து போய்விட்டது.வலுவான கூட்டணி கட்சியான திமுக மோடிக்கு ஆதரவளித்ததில் குழம்பிவிட்டது காங்கிரஸ்.வேறு வழியில்லாமல் ஆரம்பத்தில் அதை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது

திமுக இணைய குழுவினர் உளறிக் கொண்டிருந்தாலும் ஸ்டாலின் மிக ஜாக்கிரதையாக அளந்தெடுத்து இந்த பிரச்சனையில்நகர்ந்தார்.உண்மையிலயே அவர் இதில் எந்த அரசியலும் செய்யவில்லை.

ஒரு ஆடியோ சுற்றி வந்தது.அதாவது CAA போராட்டத்தில் எல்லாம் நம்மை கலந்து கொள்ளச் சொன்னார் ஆனால் இப்போது இதைப்பற்றி வாயே திறக்க மாட்டேன் என்கிறாரே என்று இரண்டு திமுக உறுப்பினர் அதிருப்தியோடு பேசுவது போல அமைந்திருந்தது அந்த உரையாடல்.அது சுற்றி வந்த மறுநாள் ஸ்டாலின் வெளியே வந்து சில நலத்திட்டங்களை அவரது தொகுதியில் செய்து சென்றதைத் தவிர இதில் அவர் முழுமையாக அரசோடுதான் இருக்கிறார்.

ஸ்டாலினின் இந்த அரசியல் செயல்பாடுகள் காங்கிரஸ்ஸை பெரிதாக அச்சம் கொள்ள வைத்தது. திடிரென ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் செயல்பாடுகள் குறித்து ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்தார் அதற்கு பிடிஆர் தியாகராஜன் பேட்டி கொடுக்கும் திறமை வேறு செயல்பாடு என்பது வேறு.தமிழக அரசு செயல்பாட்டில் தோல்வியடைந்துவிட்டது என சிதம்பரத்திற்கு பதில் கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்கள்.நாடாளுமன்ற கூட்டத்துக்கு டி.ஆர்.பாலுவை அனுப்புவதாக சொன்னதாக செய்தி கொடுத்திருக்கிறார்கள்..அதைத்தாண்டி பிரதமரும்,அமித்ஷாவும் ஸ்டாலின் குடும்ப நலத்தை பற்றி விசாரித்ததாக செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பக்கங்கள் புரள ஆரம்பித்துவிட்டன.ஸ்டாலின் பாஜக பக்கம் நன்முகத்தை காட்ட விரும்புகிறார் எனப்புரிந்து ப.சிதம்பரம் அதிமுக பக்கம் திருப்பினார். அதை விட அடுத்த படிகள் இன்று ஏறி வந்து நிற்கிறது விஷயங்கள் மத்திய அரசின் தற்போதைய முயற்சி மற்ற உலக நாடுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இந்தியாவில் என்ன நடவடிக்கை எடுக்க படுகிறது என்பது குறித்து பேசிய அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களிடமும் விளக்கினார் பின்பு அவர்களின் கருத்தை தொலைபேசியில் கேட்டறிந்தார்.

உண்மையில் பாஜக திமுக கூட்டணி அமைவதற்கு ஒரு சதவிகிதம் வாய்ப்பு கூட இல்லை ஆனால் நிச்சயமாக கொரோனா அரசியலில் எந்த கட்சியும் மூக்கை நுழைக்காது என்பதே இப்போதைய மோடியின் ஒரே நோக்கம் அதற்காகத்தான் அனைத்து தரப்பிலும் தன்னுடைய காய்களை தெளிவாக நகர்த்துகிறார், பாஜக கால்தடம் இல்லாத தமிழகத்தில் நேற்று மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றியதை வைத்தே புரிந்து கொள்ளலாம்.

மோடியின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதனை கொரோனோவை வென்றால் நிச்சயம் இந்தியா தற்போதைய சூழலில் வெற்றிக்கனியை பெரும் என நம்ப படுகிறது, அது உலக அரசியலில் தனக்கான நிலையான இருப்பிடத்தை பிடிக்க உதவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, ஐரோப்பிய யூனியனின் வீழ்ச்சியே அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவியது.

அது போல் ஒற்றுமையாக கொரோனவை வென்றால் இந்தியா சாதிக்கும் என்றும் அதற்காக மோடி அனைத்து தரப்பையும் அரவணைத்து செல்வார் என்றும் இதனை அயல்நாட்டு ஊடகங்களும் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*