புழல் சிறையில் இருந்து பரவியதா கொரோனா? கைதிகளுக்கு சோதனை!

புழல் சிறையில் இருந்து பரவியதா கொரோனா? கைதிகளுக்கு சோதனை!

Loading...

புழல் சிறையில் இருந்து வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட 5 கைதிகளுக்கு கொரோனா உறுதியானதால் புழல் சிறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் 12 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருவது மக்களுக்கு பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Loading...

இந்த கொரோனா பரவல் தற்போது சிறைச்சாலைகளையும் விட்டு வைக்கவில்லை. புழல் சிறையில் பயிற்சியை முடித்து கைதிகள் சிலர் வேறு மாவட்ட மத்திய சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்ட 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு புழல் சிறையில் இருந்து கொரோனா பரவியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து புழல் சிறையில் அந்த கைதிகள் இருந்தபோது அவர்களுடன் பழகிய நபர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்  74 கைதிகள், 19 காவலர்கள் அடக்கம். இதன் முடிவுகள் இன்னும் இரு தினங்களில் வெளியாகும். அந்த முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*