என்னதான் ஊரடங்கு போட்டாலும்… இதை செய்யாவிட்டால் எல்லாம் வேஸ்ட்தான்! ராகுல் காந்தி கருத்து!

என்னதான் ஊரடங்கு போட்டாலும்… இதை செய்யாவிட்டால் எல்லாம் வேஸ்ட்தான்! ராகுல் காந்தி கருத்து!

Loading...

இந்தியாவில் நாளொன்றுக்கு நடக்கும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை 40000 ல் இருந்து ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தன் கோரக்கரங்களால் இதுவரை 28,00,000 பேர் வரைப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,00,000 ஐ தாண்டியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26917 ஆக உள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 826 ஆக உள்ளது.

Loading...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மாதம் மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து 33 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனையடுத்து. ஊரடங்கு அமல்படுத்தப் பட்டாலும் நாளுக்கு நாள் புதிய நோயாளிகள் அதிகரித்த வண்ணமே உள்ளனர். நேற்று மட்டும் 1900க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அதிகளவில் கொரோனா பரிசோதனைகளை செய்யாவிட்டால் எந்த பலனும் இல்லை என எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. இந்தியாவில் இப்போது தினமும் 40,000 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நாட்டில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘கொரோனாவை எதிர்கொள்ள மிகப்பெரிய அளவில் பரிசோதனை செய்வதுதான் ஒரே வழி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போது நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் 40,000 பரிசோதனைகளின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக அதிகரிக்க வேண்டும். இதற்கான பரிசோதனை கருவிகள் போதுமான அளவில் இருக்கின்றன. ஆனால் சோதனை செய்வதற்குத் தடையாக இருக்கும் விஷயங்களை மத்திய அரசு சரி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*