கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு – கமல் வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை !

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு – கமல் வீட்டின் முன் ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சை !

Loading...

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தின் முன்பு மாநகராட்சி போஸ்ரால் குழப்பம் உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 5,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐ நெருங்கியுள்ளது. இதனால் வைரஸ் பரவியுள்ள 192 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கடந்த சில நாட்களாக வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

Loading...

இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரொனாவை மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுபோன்ற போஸ்டர் சென்னையில் உள்ள நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலின் வீட்டின் முன் ஒட்டப்பட்டுள்ளதால சர்ச்சை உருவாகியுள்ளது. ஆனால் அந்த போஸ்டர் மாநகராட்சி அதிகாரிகளால் ஒட்டப்படதற்கான எந்த ஆதாரமும் இல்லை என சொல்லப்படுகிறது. மேலும் அந்த போஸ்டரில் உள்ள கையெழுத்திலும் சில குழப்பங்கள் உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த போஸ்டரை இப்போது நீக்கியுள்ளனர்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*