மருத்துவமனை வளாகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – கொரோனா தொற்று நோயாளி எடுத்த விபரீத முடிவு!

மருத்துவமனை வளாகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – கொரோனா தொற்று நோயாளி எடுத்த விபரீத முடிவு!

Loading...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் சென்னையில் மருத்துவமனையிலேயே தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தினசரி எண்ணிக்கை 700க்கு மேல் உள்ளது. சென்னையில் மட்டும் தினசரி 100 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு மட்டுமே இதுவரை 11, 000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அளவுக்கு அதிகமான நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரப்பப்பட்டு தற்போது தற்காலிக மருத்துவமனைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

Loading...

இந்நிலையில் கொரோனா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட நபர் ஒருவர் நேற்று சென்னையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவர் மருத்துவமனையிலேயே தூக்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவமானது அங்கே பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தன்னம்பிக்கையை அதிகரிக்கும் மன நல சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நிரூபணமாக்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா வார்டில் இருந்த சிலர் இதுபோல தற்கொலை செய்துகொண்டதும், பலர் தப்பித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*