ஊரடங்கின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஊரடங்கின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

Loading...

இந்தியாவில் என்ன காரணத்துக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதோ அது தோல்வியில் முடிந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு அதன் பின்னர் 3 முறை நீட்டிக்கப்பட்டு இன்றோடு 62 நாட்கள் முடிந்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 146 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சமாக உள்ளது.

Loading...

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு 4.0 இன்னும் 5 நாட்களில் முடிவடையும் நிலையில் மேலும் நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் இன்று வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது  பேசிய அவர் ‘இந்தியாவில் ஊரடங்கு என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டதோ அது தோல்வி அடைந்துவிட்டது. 60 நாட்களாக ஊரடங்கில் இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக உயரும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். ஆனால் இந்த நேரத்தில் மத்திய அரசு படிப்படியாக ஊரடங்கை தளர்த்திக் கொண்டு வருகிறது.

மத்திய அரசு அறிவித்துள்ள நிதித்தொகுப்பும் திருப்திகரமாக இல்லை. நாட்டின் ஜிடிபியில் 10 சதவிகிதத்தை பொருளாதார நிதித் தொகுப்புக்கு செலவு செய்ய உள்ளதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், 1 சதவிகிதத்திற்கும் குறைவான அறிவிப்புகளே வெளியாகியுள்ளன. ’ எனப் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3917 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*