ஆண்களே உஷார்… உங்களைதான் அதிகமாக தாக்குகிறது கொரோனா – அதிர்ச்சியளிக்கும் தகவல்!

ஆண்களே உஷார்… உங்களைதான் அதிகமாக தாக்குகிறது கொரோனா – அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Loading...

கொரோனா வைரஸால் பலியானவர்களில் பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 72 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆகவும் உள்ளது.

Loading...

கொரொனாவுக்கு அதிக பலியைக் கொடுத்துள்ள அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையை வைத்து நடத்திய ஆய்வில் ஒரு அதிர்ச்சிகரமான முடிவு வெளியாகியுள்ளது.  இதுவரை கொரோனாவால் இறந்தவர்களில் 71 சதவீதம் ஆண்கள் என்றும் 29 சதவீதம் பெண்கள் எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு பெரிய வித்தியாசம் என்றால் மதுப்பழக்கம், குடிப்பழக்கம் போன்றவற்றால் ஆண்களே இந்தவைரஸ் தாக்குதலுக்கு முதல் இலக்காக இருந்துள்ளதாகக்த் தெரிகிறது. மேலும் ஆண்கள் சமூக விலகலை ஒழுங்காகக் கடைபிடிக்காததும் முக்கியமானக் காரணம் என சொல்லப்படுகிறது. அதனால் ஆண்களே உஷார் ஆக இருங்கள். ஆகவே பெண்கள் போல ஆண்களும் ஒழுங்காக சுய தனிமைப்படுத்துதலைக் கடைபிடிக்கவேண்டும் என அறிவுரைகள் எழுந்துள்ளன.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*