மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு !இனி வெளியே வந்தால் கைது அடியை மிஞ்சிய மற்றொரு தண்டனை !!

கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர், 21 நாள் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 75% மக்கள் வீட்டிலேயே இருக்கின்றனர், இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தாக்கம் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் வெளியில் நடமாடுகின்றனர்.

Loading...

இவர்களால் கொரோனா தொற்று பரவும் சூழல் உண்டாகியுள்ளது தற்போதுவரை இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1000 நபர்களை தாண்டவில்லை, இருப்பினும் கொரோனா மூன்றாவது நிலைக்கு சென்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில் மத்திய அரசு வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதனிடையே சட்டத்தை மீறி வீணாக வெளியே வருபவர்கள் கைது செய்யப்பட்டு வருவதுடன் , சில இடங்களில் காவல்துறையினரால் லத்தியை கொண்டு அடித்து விரட்டப்பட்டும் வருகின்றனர், இந்நிலையில் இன்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை ஒன்றிணை அனுப்பியுள்ளது அதில்.,

Loading...

மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது,
விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்த கூடாது எனவும்.,

தங்கும் விடுதிகள் நடத்தும் விடுதி உரிமையாளர்களை இதுகுறித்து எச்சரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது மேலும்
இடம் பெயர்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்து நிறுவனங்கள் பாதுகாக்க வேண்டும் எனவும்

தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை அரசு மருத்துவமனையில் 14 நாள் கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனவும் இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தற்போது கைது, அடிதடி நடவடிக்கையை காட்டிலும் இனி உரிய தேவையின்றி வெளியே வருபவர்கள் 14 நாட்கள் அரசு மருத்துவமனையில் தனிமை படுத்தப்படுவார்கள் என்று தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதுடன், தனிமை படுத்தப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கும் உள்ளாகும் சூழல் உண்டாகியுள்ளது.

©TNNEWS24

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*