கொரோனா பாதிப்பு… இந்தியா vs உலகம் – ஒரு ஒப்பீடு!

கொரோனா பாதிப்பு… இந்தியா vs உலகம் – ஒரு ஒப்பீடு!

Loading...

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தொட இருக்கிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்குகிறது. அதற்கடுத்த இடங்களில் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

Loading...

தற்போது இந்தியாவிலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு வரும் நிலையில் உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது பற்றி நேற்று பேசிய அவர் ’கொரோனா பாதித்தவர்களில் 42,298 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இப்போது 61,149 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3 சதவீதத்துக்குக் கம்மியானவர்கள் மட்டுமே ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 சதவிகிதம் பேருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடந்து வருகிறது. 

உலக அளவில் ஒரு லட்சம் பேருக்கு 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 7.9 ஆக உள்ளது. அதே போல இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 0.2 சதவிகிதம் மட்டுமே இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குணமடைவோர் விகிதம் படிப்படியாக உயர்ந்து இன்று 39.62 சதவிகிதமாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*