கொரோனா இப்படியும் பரவலாம் – அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி முடிவு!

கொரோனா இப்படியும் பரவலாம் – அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி முடிவு!

Loading...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவது மூலமாகவும் சுவாசிக்கும் போதும் கொரோனா பரவலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,00,000 ஐ தாண்டியுள்ளது. வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஐ நெருங்கி வருகிறது. இதனால் வைரஸ் பரவியுள்ள 202 நாடுகளிலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2900 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலி எண்ணிக்கை 72 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆகவும் உள்ளது.

Loading...

கொரொனாவுக்கு அதிக பலியைக் கொடுத்துள்ள அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கையை வைத்து நடத்திய ஆய்வில் ஒரு அதிர்ச்சிகரமான முடிவு வெளியாகியுள்ளது.  இதனால் அமெரிக்காவில் பல விதமான ஆய்வுகள் கொரோனாவை முன்னிட்டு நடந்து வருகின்றன. அதில் ஒரு ஆய்வு முடிவில் அதிர்ச்சியளிக்கும் சில காரணங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க சுகாதார நிறுவனம் செய்த ஆய்வுகளின் முடிவுகளில் ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் மட்டுமல்ல அவர்கள் பேசும்போதும், அவர்கள் விடும் மூச்சுக்காற்று மூலம்கூட காற்றில் பரவக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. அதனால் முகக்கவசம் அணிவது தொடர்பான அறிவுரைகளில் மாற்றம் ஏற்பட உள்ளது. முன்னர் போல இல்லாமல் இப்போது அனைவரும் மாஸ்க்குகளை அணியவேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் மக்களை மேலும் பீதி கொள்ள செய்துள்ளது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*