உணவே மருந்து, மருந்தே உணவு என்ற முறையில் முருங்கைப்பூ பொரியல் செய்வது எப்படி?

உணவே மருந்து, மருந்தே உணவு என்ற முறையில் முருங்கைப்பூ பொரியல் செய்வது எப்படி?

Loading...

நாம் முன்னோர்கள் கூறிய பழமொழி ஆன உணவே மருந்து, மருந்தே உணவு வகையில் மிக முக்கியமானது முருங்கை மரம் ஆகும். முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக் கூடிய தன்மை கொண்டவை. இந்த முருங்கை மரம் தற்போது அனைத்து வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இந்த மரத்தில் இருந்து முருங்கை இலை மற்றும் பூ, காய் ஆகியவை மருந்து பொருளாகவும், உணவு பொருளாகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றன.


முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் மனிதன் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்கிறது.மற்றும் கொழுப்பு அளவை குறைக்கிறது அதனுடன் ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது.மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.

Loading...

முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. மற்றும் இவை தினமும் கசாயம் செய்து குடித்து வந்தால் உடம்பில் பித்தம் குறையும். முருங்கை பூ வைத்து பொரியல், குழம்பு மூலம் உணவில் எடுத்து வந்தால் ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி இவற்றிக்கு உண்டு. முருங்கை பூவை வைத்து வித்தியாசமான முறையில் பொரியல் செய்வது பற்றி பார்க்கலாம்: அடையாளமே தெரியவில்லை என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி புகைப்படம்!!..

முதலில் இவற்றிக்கு தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு -1/4 கப்,சின்ன வெங்காயம் -10,முருங்கைப்பூ -1 கப்,பச்சை மிளகாய் – 2,சாம்பார்பொடி- 3/4டீஸ்பூன்.
மஞ்சள் தூள் -1 சிட்டிகை,காய்ந்த மிளகாய் – 1, அல்லது 2;

செய்முறை:
வாணலை அடுப்பில் வைத்து சூடேற்றிய பின்பு சிறிது நெய்யை விட்டு, அதில் முதலில் சுத்தம் செய்த முருங்கைப்பூவைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும். பின்பு தனியாக 1/4 கப் பாசிப்பருப்பு மற்றும் மஞ்சள்தூள் ஆகியவை சேர்த்து அரை அவியலாக வேக வைக்க வேண்டும். பின் அதனுடன் நெய்யில் வதக்கிய முருங்கைப்பூவைப் மற்றும் சின்ன வெங்காயம்(10) மற்றும் பச்சை

மிளகாய், சாம்பார்பொடி சேர்த்து நன்கு வேகவிடவும்.
பாசிப்பருப்புடன் முருங்கை பூ வெந்தவுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.பின்பு அடுத்த வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்,சிறுதளவு உளுந்து ஆகியவை சேர்த்து எண்ணெய்யில் தாளித்து அதனுடன் வேக வைத்த முருங்கை பூ வை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும், பின்பு சுவையான சத்து நிறைந்த முருங்கை பூ பொரியல் ரெடி.பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 40 குழுவிற்கு ஆப்பு அடிக்கபட்டது ! அடுத்தது தமிழகம் !

,

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*