சீனாவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு !

இந்தியா சீனா எல்லையில் போர் பதற்றம் காணப்பட்ட நிலையில் இந்திய மக்களை மற்றொரு சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, அது இந்தியாவின் எதிரி நாடுகளில் ஒன்றான சீனாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பணம் பரிமாறியுள்ளது என்றும் 2005-2006 ஆகிய கால கட்டங்களில் சீனா நிதி உதவி அளித்துள்ளது என்றும்..,

Loading...

மேலும் சீனா கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே சீனா தலைநகரில் வைத்து ராஜிவ் காந்தி தலைமையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்ற தகவல் ஆதாரங்களுடன் வெளியானது. மேலும் புகைப்படங்களும் வெளியிடபட்டது.

இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கியது, இந்நிலையில் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

Loading...

சீனாவில் இருந்து பணம் பெற்ற விவகாரம் குறித்தும் சோக்சி குழுவிடம் இருந்து பணம் பெற்ற விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது, இந்நிலையில் புகாரில் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் நிர்வாகி சோனியா காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

விரைவில் இது குறித்த அனைத்து ரகசியங்களும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

©TNNEWS24

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official
About Tnnews24 3902 Articles
Arun Ramesh, Freelance Journalist, covers Defence & Geo-politics.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*