Connect with us

#24 Exclusive

சென்னை அருகே கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டு கொலை: நண்பர் தலைமறைவு

சென்னை அருகே தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலம் என்ற பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாலிடெக்னிக் மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். அவரை சுட்ட அவருடைய நண்பர் தலைமறைவாகியுள்ளதால் அவர் தேடப்பட்டு வருகிறார்.

சென்னையை அடுத்த வண்டலூர் அருகே வேங்கடமங்கலம் என்ற பகுதியை சேர்ந்த 19 வயது முகேஷ் என்ற மாணவர் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் விஜய் என்பவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். இந்த நிலையில் விஜய்யும் முகேஷும் ஒரே அறையில் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென அறையின் உள்ளே இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டதாகவும் இதனையடுத்து விஜய் அவசர அவசரமாக அறையில் இருந்து வெளியே சென்றதாகவும் அருகில் உள்ள அறையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...

இந்த நிலையில் அருகில் உள்ளவர்கள் முகேஷின் அறைக்குள் சென்று பார்த்தபோது அவர் ரத்தவெள்ளத்தில் இருந்துள்ளார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி மட்டும் செய்யப்பட்டு பின்னர் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். முகேஷிற்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Loading...

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் 25 போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகிய விஜய்யை தேடு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும், விஜய்க்கு சட்டவிரோத கும்பல்களுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ஒருவர் அவரது நண்பராலேயே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Loading...
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending